சனி, 16 செப்டம்பர், 2017

ஏற்கனவே மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்படுவதைக் கண்டித்து சாலை மறியல்! September 16, 2017

ஏற்கனவே மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்படுவதைக் கண்டித்து சாலை மறியல்!


திருச்சியில் ஏற்கனவே மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையை மீண்டும் திறக்கப்படவிருப்பதை கண்டித்து, அப்பகுதி மக்கள் மேற்கொண்ட சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி பாலக்கரை பிராதான சாலையில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை நீதிமன்ற உத்தரவுப்படி அண்மையில் மூடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த அப்பகுதி மக்கள், தமுமுக-வினருடன் இணைந்து டாஸ்மாக் கடை முன்பு திரண்டு  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதனையடுத்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என வட்டாட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. 

Related Posts: