அதிமுக எம்எல்ஏ-க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது தவறான நடவடிக்கை என்று சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான அவர், நமது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியிடம் தொலைபேசி மூலம் தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார்.
அதிமுகவிற்கு பலவீனம்:
18 எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்கம் அதிமுகவிற்கு பலவீனம் என்றும், ஆட்சியை காப்பாற்றியவர்ளை தகுதி நீக்கம் செய்தது வருத்தமளிக்கிறது என்றும், இருந்தாலும் அவர்களை பலமுறை சபாநாயகர் எச்சரித்தார்; எம்எல்ஏக்கள் கேட்கவில்லை என்றும் சூலூர் எம்எல்ஏ கனகராஜ் தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி:
திமுகவுடன் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன, கூட்டணி வைத்தால்தான் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதால் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதிமுக வெற்றி - சிரமம்:
18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வைத்தால் அதிமுக வெற்றி பெறுவது சிரமம் எனவும் தினகரனின் நடவடிக்கை திமுகவுக்கு ஆதரவாக உள்ளது என்றும் தனது பேட்டியில் எம்எல்ஏ கனகராஜ் கூறினார்.