கடலூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 போலீஸார், பணம் தராத முதியவரை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கடலூர் அடுத்த ஓட்டேரி கெடிலம் ஆற்றில் மணல் அள்ளி வரும் மாட்டு வண்டிகளை, திருமணிக்குழி அருகே, நடுவீரப்பட்டு காவல் நிலைய போலீஸார் வழிமறித்து, பணம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.
நேற்று மாலை நடுவீரப்பட்டு காவலர்கள் 3 பேர், வழிப்பறியில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது, மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த புதுப்பாளையத்தைச் சேர்ந்த சக்கரபாணி என்ற முதியவரிடம், அவர்கள் பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
பணம் இல்லை எனக் கூறியதால், காவலர்கள் தாக்கியதில், மயக்கமடைந்த சக்கரபாணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைக் கண்ட ஊர்மக்கள், 3 காவலர்களையும் சிறை பிடித்துள்ளனர். தகவல் அறிந்து சென்ற பண்ருட்டி டிஎஸ்பி, காவலர்களை தப்பிக்க வைத்ததாகக் கூறி, கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், அங்கு சென்ற வட்டாட்சியர் மற்றும் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால், கிராம மக்கள் கலைந்து சென்றனர்.