ஈழப்போர் முடியவில்லை என்றும் புதிய பரிணாமம் எடுத்துள்ளதாகவும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் சென்னை திரும்பிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு இலங்கை தமிழர்களுக்கு அந்நாட்டு ராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து எடுத்துரைத்தார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோவை சிங்களர்கள் சிலர் தாக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவருக்கு ஐ.நா.சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஐ.நா கூட்டத்தில் பங்கேற்ற பின் ஜெனிவாவிலிருந்து வைகோ இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிங்களர்கள் தம்மை தாக்க முயன்றதைக் கண்டித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார். இலங்கை அரசு நிகழ்த்தியது இனப்படுகொலை என்பதையும் இலங்கை தமிழர் பிரச்னைக்கு தனித் தமிழ் ஈழம்தான் தீர்வு என்பதையும் ஐ.நா.மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் தாம் வலியுறுத்தியதாகக் வைகோ தெரிவித்தார்.