திங்கள், 2 அக்டோபர், 2017

இந்திய இணையங்கள் மீது ஹேக்கர்கள் தாக்குதல் - கோடிக்கணக்கான தகவல்கள் விற்கப்படும் அபாயம்! October 02, 2017

​இந்திய இணையங்கள் மீது ஹேக்கர்கள் தாக்குதல் - கோடிக்கணக்கான தகவல்கள் விற்கப்படும் அபாயம்!



நம் நாட்டில் இன்டர்நெட் முகவரிகளை வழங்க, ஐரின் என்று சுருக்கமாக அழைக்கப்படும், Indian Registry for Internet Names and Numbers அமைப்பு செயல்படுகிறது.

இதன் இணைய சர்வர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள ஹேக்கர்கள், அதில் இருந்த தகவல்கள் விற்பனைக்கு உள்ளதாக, பொதுவிவாத இணையதளங்களில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, இத்தகைய தாக்குதல்கள் நடைபெறலாம், என மத்திய அரசுக்கு இணையப் பாதுகாப்பு நிறுவனங்களான செக்ரைட் மற்றும் செக்ட்ரீ எச்சரித்திருந்தன.

இந்நிலையில், இந்தியாவில் இன்டர்நெட் முகவரிகளை வழங்கும் அமைப்பு மீது, இவ்வாறு ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஐரின் அமைப்பு மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், ஹேக்கர்களின் தாக்குதல் தொடர்பாக, ஐரின் சார்பில் எந்தவித தகவலும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.