புதன், 4 அக்டோபர், 2017

வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புபவர்களில் இந்தியர்களுக்கு முதலிடம்! October 04, 2017

வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புபவர்களில் இந்தியர்களுக்கு முதலிடம்!


வெளிநாடுகளில் இருந்து சொந்த நாட்டிற்கு அதிகளவு பணம் அனுப்புவோர் பட்டியலில் உலகளவில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் தற்காலிகமாக தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு வேலை செய்பவர்களும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு பணம் அனுப்புவது வழக்கத்தில் உள்ளது. 

உலக வங்கி வெளியிட்டுள்ள தகவலில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் நடப்பாண்டு மட்டும் இந்தியாவிற்கு 4 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் நாட்களில் இந்த தொகை மேலும் அதிகரிக்கும் எனவும் உலக வங்கி கூறுகிறது. உலக வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனா, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

Related Posts: