லவ் ஜிஹாத் எனக்கூறி காதல் தம்பதியினரின் திருமணத்தை செல்லாது எனக்கூறிய கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீது உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கேரளாவை சேர்ந்த அகிலா என்ற இந்து பெண் சஃபின் ஜஹான் என்ற இஸ்லாமியரை திருமணம் செய்து கொண்டார். இதில் இஸ்லாமியராக மதம் மாறிய அகிலா தனது பெயரை ஹதியா என்று மாற்றிக்கொண்டார்.
இந்நிலையில் அந்த பெண்ணை மீட்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற பெண்ணின் தந்தை, தனது மகள் லவ் ஜிஹாத் பெயரில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதனை தொடர்ந்து அந்த திருமணம் செல்லாது எனக்கூறிய கேரள உயர்நீதிமன்றம், லவ் ஜிஹாத் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து பெண்ணின் காதலர் சஃபின் ஜஹான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச், எதன் அடிப்படையில் கேரள உயர்நீதிமன்றம் இதனை லவ் ஜிஹாத் என தீர்மானித்தது என்று கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் 24 வயதான ஹதியாவை அவரின் பெற்றோர் எப்படி கட்டுப்படுத்த முடியும் எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
லவ் ஜிஹாத் விவகாரத்தின் உண்மைத்தன்மை குறித்து தேசிய விசாரணை ஆணையம், விசாரித்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.