வியாழன், 5 அக்டோபர், 2017

பண மதிப்பிழப்பு நடவடிக்கை தற்கொலைக்கு ஒப்பானது!” : அருண் ஷோரி October 04, 2017

“பண மதிப்பிழப்பு நடவடிக்கை தற்கொலைக்கு ஒப்பானது!” : அருண் ஷோரி


பண மதிப்பிழப்பு நடவடிக்கை எப்போதும் இல்லாத அளவிலான மிகப்பெரிய பண மோசடி திட்டம் என முன்னாள் மத்திய அமைச்சரும் பொருளாதார வல்லுநருமான அருண் ஷோரி சாடியுள்ளார். 

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் அதனை வெள்ளைப் பணமாக எளிதாக மாற்றிக்கொண்டதாகவும் அருண் ஷோரி குற்றம்சாட்டியுள்ளார். 

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பண மதிப்பிழப்பை கொண்டு வந்ததாக மோடி கூறிய நிலையில், தற்போதும் இந்தியாவிற்குள் தீவிரவாதம் அரங்கேறி வருவதாக அருண் ஷோரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசு “அருள் வெளிப்பாடுகளின்” அரசாக உள்ளதாக கிண்டலடித்த அருண் ஷொரி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஓரிரவு பிரதமர் மோடிக்கு அசரிரி கேட்டதாகவும், அதனால் உடனடியாக அவர் அதனை செயல்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது தைரியமான நடவடிக்கை தான் என்று குறிப்பிட்ட அருண் ஷோரி, தற்கொலையும் தைரியமான செயல்தான் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் தெரிவித்தார். 

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது 2002 முதல் 2004 வரை தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் அருண் ஷோரி என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Posts: