
புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி, வரும் 9,10 ம் தேதிகளில் நாடு முழுவதும் 40 லட்சம் லாரிகள் இயங்காது என லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் முன்னாள் தலைவர் நல்லதம்பி, லாரிகளுக்கு சுங்கவரி ஆண்டுக்கு ஒரு முறைமட்டும் செலுத்தும் வகையில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், நெடுஞ்சாலையில் உள்ள போக்குவரத்து, மற்றும் காவல்துறை சோதனைச் சாவடிகளை அகற்ற வேண்டும், லாரித் தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் 9,10 ஆகிய நாட்களில் நாடு தழுவிய அளவில் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக நல்லதம்பி கூறினார்.