
பிரதமர் நரேந்திரமோடி மிகப்பெரிய தீவிரவாதி என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப் விமர்சித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது முஸ்லிம்களின் ரத்தக்கரை படிந்த கைகளுக்கு சொந்தக்காரரான ஒருவர், தற்போது இந்தியாவின் பிரதமராக இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். எனும் ஒரு தீவிரவாத அமைப்பு ஆட்சி செய்து வருவதாகவும், ஆர்.எஸ்.எஸ். என்னும் தீவிரவாத அமைப்பின் கிளைக் கட்சிதான் பாஜக என்றும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப் விமர்சித்துள்ளார்.