வியாழன், 5 அக்டோபர், 2017

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் முதலிடம் பிடித்த தூத்துக்குடி மாவட்டம்! October 05, 2017

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் வரை 9,575 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 1,116 பேரும், திருநெல்வேலி  மாவட்டம், சங்கரன் கோவிலில் 1,025 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் கோவை மாவட்டம் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.   கோவையில் 844 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 746 பேரை டெங்கு பாதித்துள்ளது. கன்னியாகுமரி, திருப்பூர், தேனி, சேலம், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, விழுப்புரம் என அனைத்து  மாவட்டங்களும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பரில் மட்டும் 125 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Related Posts: