குஜராத்தில் மீசை வைத்ததற்காக ஆதிக்க சாதியினரால் தலித் இளைஞர்கள் தாக்குதலுக்கு உள்ளானதை கண்டித்து இளைஞர்கள் WhatsApp-இல் தங்களது Profile Picture-ஐ மீசையை முறுக்கியபடி வைக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குஜராத்தில் லிம்போத்ரா கிராமத்தில் செவ்வாய்கிழமையன்று பள்ளியைவிட்டு வீட்டுக்கு நடந்துச் சென்றுக் கொண்டிருந்த திகந்த் மஹேரியா என்ற 17 வயது சிறுவன் மோட்டர் சைக்கிளின் சென்ற இளைஞர்களால் தாக்கப்பட்டார். குஜராத்தில் ஆதிக்க சாதியான ராஜ்புத் (ராஜபுத்திரர்) சாதியை சேர்ந்த இளைஞர்கள் தலித் இளைஞரின் முதுகில் பிளேடால் கிழித்துவிட்டு சென்றுள்ளனர்.
திகந்த் மஹேரியாவின் உறவினர் பையனான பியூஸ் பர்மர் என்ற இளைஞரை மீசை வைத்ததற்காக ஆதிக்க சாதியினர் தாக்கியுள்ளனர். தன் மீது தாக்குதலில் ஈடுபட்ட ஆதிக்க சாதியினர் மீது பியூஸ் பர்மர் போலீசில் புகார் அளித்ததால் கோவமடைந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் அடாவடித்தனமாக அவரது உறவினர் மகனான திகந்த் மஹேரியா மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீசை வைத்ததற்காக மேலும் சில தலித் இளைஞர்கள் மீதும் ஆதிக்க சாதி இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
ஆதிக்க சாதியினரின் இந்த வெறிச்செயலால் கொதித்துப் போன அக்கம் பக்கம் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் தங்கள் மீசையை முறுக்கியபடியுள்ள படத்தின் மீது "Mr.Dalit" என எழுதி அதை தங்களது WhatsApp முகப்பு படமாக வைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களிலும் அப்படங்களை அவர்கள் பதிவேற்றி வருகின்றனர்.