வியாழன், 5 அக்டோபர், 2017

மரத்தடியில் அமர்ந்து பாடம் கற்கும் மாணவர்கள்! October 05, 2017


மரத்தடியில் அமர்ந்து பாடம் கற்கும் மாணவர்கள்!


ஸ்மார்ட் வகுப்புகள், இணைய வழிக்கல்வி என கல்வித்துறை மேம்பட்டு வரும் நிலையில் பொன்னமராவதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று மரத்தடியில் இயங்கிவரும் அவல நிலை உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 800க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் குற்றம்சாட்டினர். 

இதையடுத்து பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. எனினும் இந்த கட்டடம் மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கல்வி பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புதிய வகுப்பறை கட்டடத்தை விரைந்து திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts: