வியாழன், 5 அக்டோபர், 2017

அமெரிக்க புலனாய்வு அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல் October 05, 2017

அமெரிக்க புலனாய்வு அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்


லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தீவிரவாத செயலாகக் கருத ஆதாரம் இல்லை என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.  

லாஸ் வேகாஸில் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய FBI அமைப்பின் சிறப்பு அதிகாரி ஆரோன் ரவுஸ், பாதுகாப்பு அதிகாரி ஜோசப் லமோர்டோ ஆகியோர் இதனைத் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஸ்டீபன் பட்டாக் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், பிலிப்பைன்ஸ் சென்றிருந்த அவரது தோழி மரிலொ டேன்லி, நேற்று முன்தினம் லாஸ் வேகாஸ் திரும்பினார். 

இதனையடுத்து, அவரிடம் FBI அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது, ஸ்டீபன் பட்டாக் எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்டார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அறிந்ததும் தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், இதுபோல் துப்பாக்கிச் சூடு நடத்தும் சுபாவம் கொண்டவராக ஸ்டீபன் பட்டாக் இருந்ததில்லை என்றும் மரிலொ டேன்லி தெரிவித்துள்ளார். 
அமெரிக்க புலனாய்வு அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதுவரை நடைபெற்ற விசாரணையில், இச்சம்பத்தை தீவிரவாதிகளின் நடவடிக்கையாகக் கொள்ள ஆதாரம் இல்லை என்றும் அவர்கள் கூறினர். 

இதனிடையே, தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் சந்திக்க லாஸ் வேகாஸ் நகருக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், அவரது மனைவி மெலினியா டிரம்ப்பும் தலைநகர் வாஷிங்டன் திரும்பியுள்ளனர். 

லாஸ் வேகாஸ் நகரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அருகில் இருந்த நட்சத்திர விடுதி ஒன்றின் மேல் இருந்தவாறு ஸ்டீபன் பட்டாக் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், 58 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 

தற்போது உலக நாடுகளில் நடக்கும் தாக்குதல் அனைத்துக்கும் கிட்டதட்ட ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்க்கும் 
நிலையில், இச்சம்பத்தை தீவிரவாதிகளின் நடவடிக்கையாகக் கொள்ள ஆதாரம் இல்லை என FBI அமைப்பு கூறியுள்ளதால் வாண்டடாக வண்டியில் ஏறுகிறதா ஐ.எஸ் என தோன்றுகிறது.

Related Posts: