
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 17ஆயிரம் கன அடியாக இருந்தது.
இந்நிலையில் கர்நாடகாவில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் காவிரியாற்றில் வினாடிக்கு இருபதாயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
இதனால், அங்கு பரிசல்கள் இயக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.