புதன், 18 அக்டோபர், 2017

நிலவேம்பு நீர் குறித்த அதிர்ச்சி கருத்துக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு October 17, 2017

நிலவேம்பு நீர் குறித்த அதிர்ச்சி கருத்துக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு


நிலவேம்பு நீர் பருகினால் மலட்டுத் தன்மை ஏற்படும் என்ற தகவல் தவறானது என அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

சென்னை குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கு டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு காய்ச்சலுக்கு மருந்தாக நாடு முழுவதும் நிலவேம்பு கசாயம் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். 

சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டியூட் நில வேம்பு கசாயத்தை ஆய்வு செய்து அங்கீகரித்துள்ளதாக தெரிவித்த விஜயபாஸ்கர், நிலவேம்பு கசாயம் குடித்தால் டெங்கு வராது என தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவித்தார். நிலவேம்பு கசாயம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வெளியான செய்தி தவறானது என்றும், அதனை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார்.