வங்கக் கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நேற்று ஒரே நாளில் 10 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. எண்ணூரில் 14 சென்டி மீட்டரும், பூண்டி மற்றும் செங்குன்றத்தில் 13 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. சோழவரத்தில் 12 சென்டி மீட்டர் மழையும் தாமரைப்பாக்கத்தில் தலா 11 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.