
கிருஷ்ணகிரி அருகே ஒற்றை யானை தாக்கி 3 நாளில் மூன்றாவது நபர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தியும் யானை மயங்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அடுத்த சின்னாறு பகுதியில் கடந்த ஒரு வாரமாக ஒற்றை யானை, கடந்த மூன்று நாட்களாக அப்பகுதியில் முகாமிட்டு இருந்தது.
நேற்று முன் தினம், விவசாய நிலத்திற்கு சென்ற யானை, விவசாயி ராஜப்பா என்பவரை தாக்கி கொன்றது. அதனை தொடர்ந்த் நேற்று காலை ஒட்டேனூர் அருகே முனிராஜ் என்பவரை தாக்கி கொன்றது. இந்த நிலையில் இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை திட்டமிட்டு நேற்று முழுவதும் யானையை தேடி வந்தனர். எனினும், யானை இருக்கும் இடம் தெரியாததால் மயக்கு ஊசி மூலம் சுட்டு பிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் யானை, இன்று காலை ஒட்டேனூர் பகுதியில் தேவன் என்பவரை தாக்கி கொன்றது. தொடர்ச்சியாக மூன்று நாளில் மூன்று பேரை இந்த யானை தாக்கி கொன்றதால் பொதுமக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். இதற்கிடையே அந்த யானைக்கு, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி, யானையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் யானை ஊசி செலுத்தியும் மயங்காததால் என்ன செய்வதென்றே தெரியாமல், தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.