
வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் ஒட்டுமொத்தமாக 12 ஆயிரத்து 622 கோடி ரூபாய் கடன் மோசடி செய்துள்ளதாக, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
வைர நகை வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் 11 ஆயிரத்து 300 கோடி ரூபாய் கடன் மோசடி செய்ததாக பஞ்சாப் நேஷனல் வங்கி குற்றம் சாட்டியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், நீரவுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கினர்.
மேலும், அவருக்கு சொந்தமான நகைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், 12 ஆயிரத்து 622 கோடி ரூபாய் அளவுக்கு கடன் மோசடி நடந்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.