காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சிப் பாதித்த பகுதிகளாக அறிவித்து, நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி வலியுறுத்தி உள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
மேலும், ஜார்கண்ட் மாநில அரசு, மனித உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியில் போராடுகின்ற, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ததை, உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் தமீமுன் அன்சாரி வலியுறுத்தினார்.