புதன், 21 பிப்ரவரி, 2018

​கமலை கலாமுடன் ஒப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு..! February 21, 2018

Image

நடிகர் கமலை கலாமுடன் ஒப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் கமலின் கட்சி பெயர், கொள்கை, மற்றும் கொடி இன்று மாலை அறிமுப்படுத்தப்பட உள்ளது. இதற்காக மதுரை, ஒத்தக்கடையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கமலை வரவேற்று மதுரை முழுவதும் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில் நடிகர் கமல்ஹாசனை, அப்துல் கலாமுடன் ஒப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. திராவிடமே ஓய்வெடு, திறமைக்கு வழிவிடு போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களும், திராவிட ஹாசனே வருக என்ற வாங்கங்களுடனும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 

ஒரு சினிமா நடிகரை, மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாமுடன் ஒப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பல அரசியல் கட்சித் தலைவர்களும், அப்துல் கலாமின் ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சுவரொட்டிகளால் சர்ச்சை எழுந்துள்ளது.