திங்கள், 19 பிப்ரவரி, 2018

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை எம்சிபி பிரேடி ஹவுஸ் கிளைக்கு சீல் February 19, 2018

Image

வைர வியாபாரி நீரவ் மோடிக்கு முறைகேடாக பண பரிமாற்றம் செய்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை எம்சிபி பிரேடி ஹவுஸ் கிளைக்கு சீல் வைத்து சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. 

11,400 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் சிபிஐ சார்பில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு தப்பியோடிய நீரவ் மோடியை இண்டர்போல் உதவியுடன் இந்தியா அழைத்துவந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. 

மோசடியில் நீரவ் மோடிக்கு உதவிய முன்னாள் வங்கி அதிகாரிகள் உட்பட பலரை கைது செய்து விசாரித்து வருகிறது. முறைகேடாக பணபரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீரவ் மோடிக்கு சொந்தமான 5,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட நகை, சொத்துகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். 

இந்நிலையில், நீரவ் மோடி முறைகேடாக பண பரிமாற்றம் செய்ய உதவிய பஞ்சாப் நேஷனல் வங்கியின் எம்சிபி பிரேடி ஹவுஸ் கிளைக்கு சிபிஐ சீல் வைத்துள்ளது.