ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தில் முறைகேடு?! February 25, 2018

Image

மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை ஈரோட்டில் வரும் செவ்வாய் அன்று அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று வழங்க உள்ளார். 

மானிய விலை ஸ்கூட்டர் திட்டதின் முதற்கட்டமாக மாவட்டம் முழுவதும் பேரூராட்சிக்கு ஒருவர் வீதம் 39 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள், விதிமுறைகளை மீறி ஆளும் கட்சிக்கு வேண்டப்பட்டவர்களும், தொழிலதிபர்களும், நில உரிமையாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

மேலும், இது தொடர்பாக அருந்ததியர் இளைஞர் பேரவை மற்றும் சுமைத்தூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் ஆட்சியருக்குப் புகார் மனு அனுப்பி உள்ளனர். 

முறைகேடுயின்றி பயனாளிகளைத் தேர்வு செய்யவும் வலியுறுத்தி உள்ளனர். இல்லையெனில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தனர். 

Related Posts: