வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

​கடலோர கிராமங்களில் குழந்தை கடத்தல் கும்பல் நடமாட்டம்: காவல்துறை விளக்கம்! February 23, 2018

Image

கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களில் குழந்தை கடத்தல் கும்பல் உலவுவதாக சமூகவலைதளங்களில் பரவும் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார். 

மணக்குடி, மிடாலம், வாணியக்குடி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் சிறுவர், சிறுமிகளை துரத்தியதாக கூறி வட இந்திய இளைஞர்களை பிடித்து பொதுமக்கள் விசாரித்தனர். 

அவர்கள் பேசும் மொழி புரியாத நிலையில் அவர்களை தாக்கிய பொதுமக்கள், தடுக்க வந்த போலீசாரையும் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இளைஞர்களில் சிலர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், குழந்தைகளை கடத்துவதாக சமூகவலைதளங்களில் பரவும் தகவலை நம்ப வேண்டாம் எனவும், சந்தேகப்படும்படியான நபர்களைக் கண்டால் போலீசாருக்கு தகவல் கொடுக்கும்படியும் அறிவுறுத்தினார்.