திங்கள், 19 பிப்ரவரி, 2018

சிறுமி ஹாசினி கொலை வழக்கு டைம்-லைன் February 19, 2018

Image

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், அந்த சம்பவம் தொடர்பான சில விவரங்கள்...

➤2017 பிப்ரவரியில், சென்னை முகலிவாக்கம் அருகே, வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஹாசினி மாயமானார்.

➤சிசிடிவி காட்சிகளை வைத்து அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்

➤விசாரணையில் ஹாசினியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக் கொண்டார் தஷ்வந்த்.

➤சம்பவத்தின்போது, ஹாசினி கூச்சலிட்டதால் போர்வையால் அழுத்தி தஷ்வந்த் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

➤ஹாசினியின் உடலை மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார் தஷ்வந்த். 

➤இதையடுத்து தஷ்வந்த கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

➤தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், 6 மாதம் கழித்து குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

➤தஷ்வந்த் கைது செய்யப்பட்டு 3 மாதத்துக்குள் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

➤ஜாமினில் வெளிவந்த தஷ்வந்த் குன்றத்தூரில் வசித்து வந்த பெற்றோருடன் தங்கியிருந்தார்.

➤இந்நிலையில், 2017 டிசம்பரில் தஷ்வந்தின் தாயார் சரளா கொலை செய்யப்பட்டார். மேலும், நகைகள் கொள்ளை போயிருந்தது.

➤போலீசார் விசாரணையில் நகைக்காக பெற்ற தாயை தஷ்வந்த கொன்றது தெரியவந்தது.

➤இதையடுத்து, மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை தனிப்படை போலீசார் பிடித்தனர்.

➤அப்போது, தனிப்படை போலீசாரிடம் இருந்து தஷ்வந்த் தப்பியோடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

➤தப்பிய தஷ்வந்தை மீண்டும் போலீசார் கைது செய்தனர், தாய் சரளாவை கொன்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

➤செங்கல்பட்டு நீதிமன்றத்தில், ஹாசினி கொலை வழக்கின் விசாரணை முடிவுற்றதை அடுத்து, இன்று தீர்ப்பு வெளியாகிறது.