1276 பேர் பயணிக்கக் கூடிய மெட்ரோ ரயிலில் ஒரே ஒரு பயணி மட்டும் பயணித்த வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில், பணிகள் நிறைவு பெற்ற 28 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டும் சேவை வழங்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு சுரங்க மற்றும் உயர்மட்ட வழித்தடத்தில் 24 ஆயிரம் பயணிகள் வரை பயணிக்கின்றனர். ஆலந்தூர் முதல் சின்னமலை, பரங்கிமலை வழித் தடத்தில் மட்டும் பகல் நேரத்தில் ஒரு சிலர் மட்டுமே பயணிக்கும் நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (16-02-2018) பகலில், பயணி ஒருவர் சென்ற ரயிலில் அவர் மட்டுமே பயணித்ததாக காணொளிக் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
1276 பேர் பயணிக்கக்கூடிய மெட்ரோ ரயிலில் ஒருவர் மட்டுமே பயணித்துள்ள நிலையில், அந்த தகவலை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்துள்ளது. கட்டணத்தை குறைத்தால் மட்டுமே பயணிகள் எண்ணிக்கை கூடும் என பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.