திங்கள், 5 பிப்ரவரி, 2018

மணல் குவாரிகளை மூடும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை February 5, 2018

Image

மணல் குவாரிகளை ஆறு மாதத்துக்குள் மூட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை பயன்படுத்த அனுமதிக்க தமிழக அரசு அனுமதி மறுத்ததைத்தொடர்ந்து ரெமியா எண்டர்பிரைசிஸ் என்ற தனியார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, தமிழகத்தில் இயற்கை வளங்களை 
பாதுகாக்கும் பொருட்டு, ஆறு மாதங்களுக்குள் அனைத்து மணல் குவாரிகளை மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 

மேலும், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவால் தமிழகத்தில் கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, உயர்நீதிமன்ற கிளையின் 
உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகூர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இரண்டு வாரத்துக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும், தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகள் குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, உச்சநீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. 

Related Posts: