தென் மாநிலத்தைச் சேர்ந்த ஆளுநர் ஒருவர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து ரகசிய விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் மாநிலத்தை சேர்ந்த ஆளுநர் மாளிகை ஊழியர் ஒருவர், ஒரு பணியை முடித்து தருவதற்காக ஆளுநரை அணுகியபோது, பாலியல் ரீதியாக உடன்பட்டால் அந்த பணியை முடித்து தருவதாக ஆளுநர் தெரிவித்ததாகவும் இது தொடர்பாக இந்த பெண் ஊழியர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ரகசிய விசாரணை நடத்த மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் சம்பத்தப்பட்ட ஆளுநர் மீதான பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் உடனடியாக அவர் பதவி விலக உத்தரவிடப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மேகாலயா மாநில ஆளுநர் சண்முகநாதன் மீது இதே போன்று குற்றச்சாட்டு எழுந்த போது அவர் உடனடியாக பதவி விலக உத்தரவிடப்பட்டார். எனினும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தென் மாநில ஆளுநர் யார் என்பது குறித்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் இது வரை வெளியிடவில்லை.