நடிகர் கமல்ஹாசன் தான் ஆரம்பிக்க இருப்பதாகக் கூறிக்கொண்டு இருந்த அரசியல் கட்சியின் பெயரை இன்று மாலை மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு அறிமுகம் செய்தார்.
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்திலிருந்து இன்று காலை துவங்கினார். இன்று மாலை தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்த இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார், ஆனால் அதற்கு முன்னதாக, இன்று காலை அவருடைய அரசியல் பயணத்தை துவங்கினார். அதன் முதல் கட்டமாக இன்று காலை அப்துல் கலாம் இல்லத்திற்குச் சென்ற கமல், கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவரின் குடும்பத்தாருடன் உரையாடிய கமல், அவர்களுடன் சிற்றுண்டி சாப்பிட்டார். பின்னர் வெளியே வந்த கமலை ரசிகர்கள் திரண்டு வரவேற்றனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடிகர் கமல்ஹாசனின் முதல் அரசியல் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக வருகை தந்திருந்தார். மதுரையில் உள்ள சுற்றுலா மாளிகையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த கமல், அவருடன் இணைந்து ஒன்றாக பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.
பின்னர் கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் இணைந்த கைகள் கொண்ட கட்சி கொடியை ஏற்றினார் நடிகர் கமல். அதனைத்தொடர்ந்து, பொதுக்கூட்ட மேடையில் தனது கட்சி பெயராக மக்கள் நீதி மய்யம் என்ற பெயரை தனது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அறிமுகம் செய்தார். பின்னர் அந்த கட்சியில் இணைவதற்கான இணையதளமும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.