
சங்கரன்கோவில் அருகே அரசு பள்ளியில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரில் பழமை வாய்ந்த மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கழிப்பறை பராமரிப்பின்றி உள்ளதால் சிறுநீர் கழிப்பதற்கும், கழிப்பிடம் செல்வதற்கும் போதிய அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் திறந்த வெளிப் பகுதிகளை கழிப்பிட உபாதைகளுக்காக பயன்படுத்த வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித் துறையும் இது தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.