
வைகை அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், மதுரையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
நவம்பர் மாதம் முதல் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கபடாததாலும், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும் வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 35 அடியாக குறைந்துள்ளது.
இதனால், கோடைக்காலத்தில் மதுரை நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.