தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு மாற்றாக, கமலின் மக்கள் நீதி மய்யம் உருவாகும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கமலின் புதிய கட்சி அறிவிப்புக் கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக மக்கள் ஊழல் நிறைந்த திமுக, அதிமுக கட்சிகளிடையே சிக்கிக் கிடப்பதாகவும், ஆனால் அந்த கட்சிகளை தூக்கி எறிய தற்போது மக்கள் தயாராகிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி, நேர்மையான மாற்றத்திற்காக கட்சி என்றும் கெஜ்ரிவால் கூறினார். கமல் நேர்மையானவர் மட்டுமல், துணிச்சலானவர் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம் சூட்டினார்.
பாஜக, காங்கிரசை நிராகரித்து ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளித்து, டெல்லி மக்கள் சாதனை புரிந்ததாக குறிப்பிட்ட கெஜ்ரிவால், கமலை ஆதரித்து, இந்த சாதனையை தமிழக மக்கள் முறியடிப்பார்கள் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்தார்.