புதன், 21 பிப்ரவரி, 2018

பழிக்குப்பழியாக பாம்பின் தலையை கடித்து துப்பிய இளைஞர்! February 21, 2018

Image

உத்தரப்பிரதேசத்தில் தன்னை கடித்த பாம்பை பழிக்குப் பழி வாங்கும் வகையில் விவசாயி ஒருவர் பாம்பை கடித்து துப்பியுள்ளார்.  

உத்தரப்பிரதேச மாநிலம், ஹாதோய் மாவட்டம் சுக்லாபூர் பாகர் கிராமத்தை சேர்ந்த சோனேலால் கடந்த சனிக்கிழமை மாலை தனது விவசாயத் தோட்டத்தில் மயங்கி கிடந்தார். அருகில் தலையில்லாத பாம்பின் உடல் ஒன்றும் கிடந்துள்ளது. 

இந்தக் காட்சியைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், சோனேலாலை பாம்பு கடித்துவிட்டதாக நினைத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சோனேலாலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.  

அவரிடம் விசாரித்ததில் தன்னை கடித்த பாம்பின் தலையை தாம் கடித்து தப்பியதாக அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளார். பாம்பு கடித்தும் ஒரு மனிதர் எதுவும் ஆகாமல் இருந்தது அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பாம்பு கடிக்காமலே அது தன்னை கடித்துவிட்டதாக நினைத்து பாம்பின் தலையை அவர் கடித்து துப்பியுள்ளது பின்னர் தெரியவந்தது. அந்த இளைஞர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

Related Posts: