பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா நதிநீரின் அளவு விநாடிக்கு 500 கன அடியாக உயர்ந்துள்ளது.
ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி கிருஷ்ணா நதி நீர் திறக்கபட்டது.பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
இதனிடையே,கிருஷ்ணா கால்வாய் ஓரம் உள்ள ஆந்திர விவசாயிகள் தீவிர உழவு பணிகளை மேற்கொண்டு வருவதால் அவர்களுக்கு நீரின் தேவை குறைந்தது. இதனால் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜுரோ பாயிண்டிற்கு வினாடிக்கு 500 கன அடி வந்து கொணடிருக்கிறது.
மேலும், இதனால் பூண்டி நீர்த்தேக்கம் தனது 35 அடி உயர முழு கொள்ளவை இரண்டே வாரங்களில் எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.