800 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் அரியலூர் கிராம நிர்வாக அலுவலருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் முதன்மை குற்றவியல் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் அருகே முனியங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பரமசிவம் என்பவர் மீது கடந்த 2004ம் ஆண்டு நிலத் தகராறு தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் எடுக்க பரமசிவம் அரியலூர் கிராம நிர்வாக அதிகாரி நாராயணனிடம் அத்தாட்சி சான்றிதல் விண்ணப்பித்துள்ளார். அதற்கு நாராயணன் 800 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பரமசிவம் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கிராம நிர்வாக அதிகாரி நாராயணனை கைது செய்தனர்.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கிராம நிர்வாக அதிகாரி நாராயணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவரை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்ததனர்.