
ஆட்சி மாற்றம் ஒன்றுதான் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பை தர முடியும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாட்டில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கலந்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் ஜாதி, மத சார்பற்ற கட்சி காங்கிரஸ் மட்டும்தான் என கூறினார். மேலும், கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக பிப்ரவரி 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்