
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கல்குவாரியில் பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்படுவதால், அருகில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி ஊராட்சியில் வேடப்பன்காடு பகுதி கல்குவாரியில் அதிகளவில் எம் சாண்டு மணல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பாறைகள் வெடிவைத்து உடைக்கப்படும்போது சிதறும் கற்கள் அருகில் உள்ள வீடுகள் மீது விழுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஓடுகள், கார்போ சீட் அட்டைகள் உடைபடுவதாகவும், அதிர்வினால் வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இதுக்குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேடப்பன்காடு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்