
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று நடைபெற்ற பாஜக பேரணியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
அப்போது மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தின் அருகே, பட்டதாரிகள் சிலர், ‘பக்கோடா’ விற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ‘மோடி பக்கோடா’, ‘அமித்ஷா பக்கோடா’ எனக் கூறி அங்கிருந்தவர்களிடம் அவர்கள் விற்றனர்.
இதையடுத்து போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர். ஒரு இளைஞர் பக்கோடா விற்று தினமும் 200 ரூபாய் சம்பாதித்தாலும், அவரும் ஒரு தொழிலதிபர் என, பிரதமர் மோடி, சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.