மத்திய அரசின் பட்ஜெட்டில் பருத்திக்கு 10% வரி உயர்த்தி இருப்பது ஏற்றுமதியாளர்களுக்கு எதிர்வினையை உருவாக்கும் வகையில் அமைந்திருப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் தலைவர், ராஜா சண்முகம், தற்போதைய பட்ஜெட் உற்சாகம் அளிக்க கூடிய வகையில் இல்லாவிட்டாலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கூடிய வகையில் இருப்பதாக தெரிவித்தார். பட்ஜெட்டில் 7 ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என உறுதி அளித்து இருப்பது வரவேற்கத்தக்கது என்றும், அதில் தமிழகத்திற்கு இரண்டு ஜவுளிப் பூங்கா வர இருப்பது மகிழ்ச்சியானது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் பருத்திக்கு 10 சதவீத வரியை உயர்த்தி இருப்பது ஏற்றுமதியாளர்களுக்கு எதிர்வினையை உருவாக்கும் என குறிப்பிட்ட அவர், ஏற்கனவே நூல் விலை உயர்ந்துள்ள நிலையில், இது ஏற்றுமதியாளர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் என கூறினார்.
source https://www.news7tamil.live/tirupur-exporters-association-comments-on-budget.html