செவ்வாய், 2 மார்ச், 2021

உங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை? எப்படி விண்ணப்பம் செய்வது?

 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இதர நோய்த்தன்மை உடையவர்களுக்கும் இன்று ( மார்ச் -1) முதல் கொரோனா தடுப்பு மருந்து  நிர்வகிக்கப்படுகிறது.

கொவிட் 19 தடுப்பூசி போடப்படுவதை கண்காணிக்கும், கோ-வின் டிஜிட்டல் தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியை எடுத்துக் கொள்வதற்கு லட்சக்கணக்கான  மக்கள் இன்று பதிவு செய்துகொண்டு வருவதால், பயனர்கள் சில தாமதங்களை அனுபவிக்கக்கூடும் . அடுத்த ஒரு வாரத்திற்குள் நிலைமை முன்னேறி விடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அருகிலுள்ள தடுப்பு மருந்து வழங்கப்படும் மையங்கள் குறித்தும், தகுதியுடையவர்கள் குறித்தும், எவ்வாறு பதிவு செய்வது என்பதும் குறித்தும் அறிந்து கொள்ள முழுமையான வழிகாட்டி இங்கே:

செயலி அங்காடி அல்லது cowin.gov.in என்ற இணைய முகவரிக்கு சென்று  கோ-வின் மென்பொருள் செயலியை  பதிவிறக்கவும் செய்து கொள்ளவும்.

புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (ஆதார் அல்லது வாக்காளர் அட்டை ) மற்றும்  தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்யும் போது கொண்டிருக்க வேண்டும்.

பதிவு செய்தவுடன், அருகிலுள்ள தடுப்பு மருந்து  மையங்கள் திரையில் தோன்றும். கோ-வின் 2.0 செயலியில் ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எனவே, பதிவு செய்தவரின் இருப்பிடத்தின் படி அருகிலுள்ள தடுப்பு மருந்து காண்பிக்கப்படும். ஒருவர், தனது வசதிக்கு ஏற்ப தடுப்பு மருந்து மையங்களை தேர்வு செய்யலாம்.

மாற்றாக, செயலியில் பதிவு செய்யாமல் நேரடியாக  தடுப்பு மருந்து வழங்கப்படும் மையங்களுக்கு சென்றும் தடுப்பூசியை ஒருவர் நிர்வகத்திக் கொள்ளலாம். ஆனால்,  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தடுப்பூசி எண்ணிக்கை  முடிந்தால், மறுநாள் வர அறிவுறுத்தப்படுவார்கள்.  முன்பதிவு செய்தவர்களுக்கு 40 சதவீத தடுப்பு மருந்தையும், நேரடியாக வருவோர்களுக்கு  60 சதவீத தடுப்பு மருந்தை ஒதுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அரசு மையங்களிலும் தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும். புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (ஆதார் அல்லது வாக்காளர் அட்டை வரவேற்கப்படுகிறது) மற்றும் இதர நோய்த்தன்மை சான்றிதழ் (தேவைப்படின்) ஆகியவற்றை பயனாளிகள் காண்பிக்க வேண்டும்.

தனியார் மையங்களில் தடுப்பு மருந்து பெறுவோர் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு ரூ. 250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தனியார் மருத்துவமனையைப் பொறுத்த வரையில்,  மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டம் , மத்திய அரசின் சுகாதார திட்ட குழு போன்ற  திட்டங்களில் இணைந்துள்ள மருத்துவமனைகளில்  மட்டும் தற்போது தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகள் விவரம்:

 

 

மத்திய அரசின் சுகாதார திட்ட குழுவின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகள் விவரம்:

 

 

 

தகுதியுடையவர்கள்:  

2022 ஜனவரி 1 க்கு முன் 60 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது சான்று மட்டுமே தேவைப்படும். அவர்கள் கோ-வின் செயலி மூலமாக தடுப்பு மருந்து மையங்களை தேர்வு செய்து கொள்ளல்லாம். (அ) வயது சான்றிதழ் ஆவணங்களுடன் நேரடியாக கொரோனா தடுப்பு மருந்து மையங்களுக்கு செல்லலாம்.

மருத்துவமனை மற்றும் நேரத்தை தேர்ந்தெடுக்கும்போது,   தடுப்பூசி குறித்த எந்த விவரமும் (கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின்) தெரிவிக்கப்படாது. இத்தகைய தகவல்கள் தடுப்பூசி மையங்களில் மட்டுமே தெரிவிக்கப்படும். தடுப்பூசி மையத்தையும், நேரத்தையும் தேர்ந்தெடுத்த பின் மாற்ற முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

45 வயதுக்கு மேற்பட்ட இதர நோய்த்தன்மை உடையவர்கள், வயது சான்று மற்றும் இதர நோய்த்தன்மை சான்றிதழ் தேவைப்படும்.

இதர நோய்த்தன்மை பட்டியல்: 

தனியார் மையங்களில் விதிமுறைகளின் படி அனைத்து வசதிகளும் உள்ளனவா என்றும், அரசு வகுத்துள்ள வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்றும் உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன.

source https://tamil.indianexpress.com/explained/covid-19-vaccinations-second-round-cowin-registration-and-vaccination-sites-guide-250216/