புதன், 30 ஜூன், 2021

ஏ.கே.ராஜன் குழுவுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதியை தமிழக அரசு பெற்றதா? ஐகோர்ட் கேள்வி

 நீட் தேர்வு தாக்கங்கள் குறித்த ஆராய குழு அமைத்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு அரசுப் பள்ளி மாணவர்கள், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.

நீட் தேர்வால் பாதிப்பு என்றால், மாற்று வழி குறித்தும், அதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என, அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த குழு கடந்த சில நாட்களாக பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களைக் கேட்டு வருகிறது. சமீபத்தில் பிரதமரை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் வழக்கு தொடுத்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 9 பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது.

மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும். அதனை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இது அனுமதிக்கத்தக்கது அல்ல. நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், தேசிய நலனின் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது. ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க ஏதுவாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, நீட் தேர்வு நடைமுறையை புறந்தள்ளும் வகையில் தமிழக அரசு குழு அமைத்திருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதியின் அடிப்படையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைபாட்டை எடுக்க முடியாது என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். நீட் தேர்வு பாதிப்புகளை கண்டறியும் குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா? என கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக அரசின் விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இது குறித்து கரு.நாகராஜன் கூறுகையில், “நீட் தேர்வு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக உள்ளது. நீட் தொடர்பாக தெளிவாக ஆராயப்பட்டு, இதனால் யாருக்கும் பாதிப்பில்லை, சமூக நீதி பாதுகாக்கப்படும் என்ற அடிப்படையில், ஆராய்ந்து தெளிவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது, இதனை யாரும் எதிர்க்கவில்லை. தூக்கத்திலிருந்து எழுப்பிக் கேட்டாலும் நீட் வேண்டாம் எனச் சொல்லும் ரவீந்திரநாத் கூட இக்குழுவில் உள்ளார். ஆனால், அவரும் எதிர்க்கவில்லை.

இந்த நிலையில், இந்தக் குழு நடத்திய கருத்துக் கேட்பில் 85 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரு கணிணியில் இருந்தே எத்தனை பேர் வேண்டுமானலும் கருத்து தெரிவிக்கலாம். ஒருவரே கூட பல முறை கருத்து தெரிவிக்கலாம். இது திமுகவின் குழுவா? தமிழக அரசின் குழுவா?

வாக்குறுதி கொடுத்துவிட்டோம் என ஒப்புக்கு நடிக்க இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வினால்தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் கனவை நனவாக்கும் தேர்வு இதுதான்

இந்த வழக்கில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. ஏழு நீதிபதிகள் ஆய்வு செய்யாமலா தீர்ப்பு வழங்கினார்கள்? இது மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றும் செயல்” என கரு.நாகராஜன் தெரிவித்தார்.

இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை, நீட் தேர்வு பாதிப்பு குறித்தே ஆராயக் கூடாது என்கிற பாஜகவின் நீதிமன்ற வழக்கு, வன்மம் குறித்தெல்லாம் நீதிமன்றம் மூலமாகவே தீர்வு வரும் என கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-questioned-tn-govt-about-formation-of-neet-committee-318396/

கூடங்குளம் அணுமின் திட்டம் : 5 மற்றும் 6-வது யூனிட் கட்டுமான பணிகள் தொடக்கம்

 

Kudankulam Nuclear Power Project Tamil News : திருநெல்வேலி குடங்குளம் அணுமின் திட்டத்தில் (கே.கே.என்.பி.பி) 2000 மெகாவாட் (2 எக்ஸ் 1000) யூனிட் 5 மற்றும் 6 இன் கட்டுமானப்பணிகள் ‘கான்கிரீட் முதல் ஊற்றலுடன்’ முதற்கட்ட பணிகள் இன்று (ஜூன் 29) தொடங்கியது. அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், அணுசக்தித் துறையின் செயலாளருமான கமலேஷ் நீல்காந்த் வியாஸ் வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் இத்திட்டத்தை, தொடங்கி வைத்தார்.

ரோசாட்டம் டைரக்டர் ஜெனரல் அலெக்ஸி லிகாச்சேவ் மற்றும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சதீஷ் கோமர் சர்மா ஆகியோரும் இந்த நிகழ்வில் என்.பி.சி.ஐ.எல், அணுசக்தி துறை மற்றும் லார்சன் மற்றும் டூப்ரோவின் மூத்த அதிகாரிகளுடன் பங்கேற்றனர்.

கே.கே.என்.பி.பி ஆறு யூனிட் ஒளி நீர் உலைகளைக் கொண்டுள்ளது, அவை ஒவ்வொன்றும் 1,000 மெகாவாட் திறன் கொண்டவை. இது ரஷ்யா கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் 2 எக்ஸ் எஸ் 1000 மெகாவாட் கொண்டு மூன்று கட்டங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் 1 மற்றும் 2 யூனிட்கள், 2.000 மெகாவாட் ஒருங்கிணைந்த திறன் கொண்டவை, இதன் மூலம் இன்னும் 57,400 மில்லியனுக்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யப்படுகின்றன

3 மற்றும் 4 யூனிட்களின் கட்டுமானம் இரண்டாம் கட்டத்தில் நடந்து வருகிறது, மொத்தம் 2.000 மெகாவாட் திறன் கொண்ட இந்த  யூனிட்கள் கிட்டத்தட்ட 50% பணிகள் நிறைவடைந்துள்ளன. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் தாமதமாகிவிட்டதாகவும், தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பணிகளை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் கே.கே.என்.பி.பி அதிகாரிகள் கூறியுள்னர்.

தொடர்ந்து  5 மற்றும் 6 யூனிட்களின் கட்டுமான பணிகள் முறையே 66 மாதங்கள் மற்றும் 75 மாதங்களில் முடிக்கப்படும். இந்த திட்டங்கள் முடிந்ததும், கே.கே.என்.பி.பி-யில் உள்ள ஆறு அலகுகள் 2028 ஆம் ஆண்டில் 6,000 மெகாவாட் சுத்தமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று கூறப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-kudankulam-npp-unit-5-and-6-construction-begins-today-318524/

காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்க்கு புதிய பதவி : தமிழக அரசு அறிவிப்பு

 

29 06 2021 Tamilnadu Minorities Commission New Chairman : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பீட்டர் அல்போன்ஸ் தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் , கடந்த 1989 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13 ஆம் நாள் அன்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால்  தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருவதாகவும், இந்த ஆணையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருத்தியமைத்து , அதன் தலைவராக எஸ் . பீட்டர் அல்போன்ஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த 1989 மற்றும் 1991 ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வான பீட்டர் அல்போன், கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவரான இவர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

source https://tamil.indianexpress.com/tamilnadu/congress-senior-peter-alphonse-new-chairman-of-tamilnadu-minorities-commission-318352/

மாட்டிறைச்சி விற்பனைக்கு தடைவிதித்த வட்டாட்சியர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

 Avinashi Tahsildar transferred, Tahsildar warns not to sell beef, அவிநாசி, வட்டாட்சியர் பணியிட மாற்றம், மாட்டிறைச்சிக்கு தடை விதித்த வட்டாட்சியர் பணியிட மாற்றம், அவிநாசி வட்டாட்சியர், மாட்டிறைச்சி அரசியல், மாட்டிறைச்சி தடை சர்ச்சை, Tahsildar beef ban controversy, avinashi, tamil nadu, beef ban politics, cpm, Avinashi

29/05/2021 திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று மிரட்டிய வட்டாட்சியரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, அந்த வட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்துள்ளது.

இந்தியாவில் 2015ம் ஆண்டு டெல்லி அருகே தாத்ரி சம்பவத்துக்குப் பிறகு, மாட்டிறைச்சி தொடர்பான தாக்குதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது ஆங்காங்கே நடந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் மாட்டிறைச்சி தொடர்பான சர்ச்சைகளும் நடந்து வந்துள்ளது.

இந்த சூழ்நிலையில்தான், அவிநாசியில் மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் நள்ளிரவில் சென்று மாட்டிறைச்சி கடைக்காரரை மிரட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தற்போது வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள கானாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் அப்பகுதியில் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார். வேலுச்சாமியின் இறைச்சிக் கடைக்கு இரவு நேரத்தில் வந்த அவிநாசி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் இங்கே மாட்டிறைச்சி விற்பனை செய்யக் கூடாது என மிரட்டியுள்ளார். அப்போது பதிவு செய்யப்பட்ட விடீயோ சமூக ஊடகங்களில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில், வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் இங்கே மாட்டிறைச்சி விற்பனை செய்யக் கூடாது. இங்கே மாடுகள் வதை செய்வதாக புகார் வந்துள்ளது. அதனால், மாட்டுக்கறி விற்பனை செய்யக்கூடாது என்று கூறுகிறார். அதற்கு அவிநாசியில் பல இறைச்சி கடைகள் நடக்கும்போது நான் மட்டும் விற்பனை செய்யக்கூடாது என்று சொன்னால் என்ன சார் என்று வேலுச்சாமி கேட்கிறார். அதற்கு ஒரு தாசில்தார் இந்த நேரத்தில வந்து சொல்றேன்னா நீ பேசிகிட்டே இருக்கற, இங்க புகார் வந்தது அதனால வந்து சொல்றேன். மாட்டிறைச்சி விற்பனை செய்தால் கடையை மூடிவிடுவேன் என்று மிரட்டும் தொனியில் சொல்கிறார்.

அவிநாசி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் இரவு நேரத்தில் சென்று மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று வாய்மொழியாகக் கூறி மிரட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிவான தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் வட்டாட்சியரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று கூறிய வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினர்.

இதையடுத்து, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவிநாசி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும், வட்டாட்சியர் அவிநாசியில் இருந்து ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதோடு, மாவட்ட நிர்வாகம் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், மாட்டிறைச்சி விற்கக் கூடாது எனக் கூறிய அவிநாசி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வனை பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/avinashi-tahsildar-transferred-for-warns-not-to-sell-beef-318556/

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம்

 Sylendra Babu IPS, Sylendra Babu appointed as New DGP of Tamil nadu, Police DGP Sylendra Babu, புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம், சைலேந்திர பாபு ஐபிஎஸ், சைலேந்திர பாபு டிஜிபி, புதிய டிஜிபி சைலேந்திர பாபு, தமிழ்நாடு, New DGP Sylendra Babu, Tamil Nadu govt appoints new dgp Sylendra Babu, tamil nadu police, tamil nadu govt

30 06 2021 தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இவர் தமிழ்நாட்டின் 30வது டிஜிபியாக ஜூலை 1ம் தேதி பதவியேற்கிறார்.

தமிழ்நாட்டில் தற்போது டிஜிபியாக உள்ள ஜே.கே.திரிபாதியின் பணி காலம் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதனால், புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. தமிழ்நாடு காவல் பணியில் உள்ள 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு பரிந்துரை செய்தது. அதில் மிகவும் சீனியரான சைலேந்திர பாபு ஐபிஎஸ் தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 29) அறிவித்துள்ளது.

1987ம் ஆண்டு இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரியாக தேர்வான சைலேந்திர பாபு, காவல்துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். தற்போது, ரயில்வே போலீஸ் டிஜிபியாக உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த சைலேந்திர பாபு விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொதுச்சட்டம் இளங்கலை பட்டமும் மக்கள் தொகை கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். அதோடு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் “Missing Children” ஆய்வேட்டை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார்.

ஐபிஎஸ் அதிகாரியான சைலேந்திர பாபு உடற்பயிற்சியிலும் விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவர். இளைஞர்கள் மத்தியில் ஐபிஎஸ் பணி லட்சியத்தை உருவாக்கியதில் சைலேந்திர பாபுவுக்கு முக்கிய பங்கு உள்ளது. இளைஞர்களின் இன்ஸ்பிரேஷனாக இருந்த சைலேந்திர பாபு தற்போது ரயில்வே டிஜிபி பணியில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில்தான், தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை டிஜிபியாக நியமனம் செய்யபட்டுள்ளார். அவருக்கு இளைஞர்கள் பலரும் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/sylendra-babu-ips-appointed-as-new-dgp-of-tamilnadu-318568/

செவ்வாய், 29 ஜூன், 2021

அழிவின் விளிம்பில் இருக்கும் கானமயில்,

 Great Indian Bustard habitat loss

Source: Gujarat Forest Department

Great Indian Bustard habitat loss : 2004 – 2014 காலங்களில் ராஜீவ் காந்தி க்ரமீன் வித்யுதிகரன் யோஜனா (Rajiv Gandhi Grameen Vidyutikaran Yojana) என்ற பெயரில் இந்தியாவின் கடைகோடி கிராமங்களுக்கும் மின்சாரம் வழ்ங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தீன் தயாள் உபாத்யாய கிராம ஜோதி யோஜனா (Deen Dayal Upadhyay Gram Jyoti Yojana) என்ற திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி என்ற அறிவிப்பை தற்போதைய மோடி அரசு அறிவித்தது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற “semiarid” பகுதிகளில் பலருக்கும் நம்பிக்கையை அளிக்கும் வகையில் காற்றாலை மற்றும் சூரிய ஒளியில் மின்சாரம் எடுக்கும் திட்டம் அமைந்துள்ளது. ஆனால் இது அந்த நிலத்தின் சூழலையே மாற்றும் தன்மை கொண்டது என்பதிலும் சந்தேகம் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

வளர்ச்சி அனைத்து தரப்பினருக்குமானது தான். ஆனால் அதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் சரியானவையா? அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, வேறெந்த உயிரினங்களுக்கும், அவற்றின் வாழும் சூழலுக்கும் பிரச்சனைகள் வராத வகையில் இருக்குமா என்பதை சோதனையிட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பது நாம் எழுப்ப வேண்டிய மிக முக்கியமான கேள்வியாகும்.


ஆண்டு தோறும் மின்கம்பிகளில் சிக்கி பல்வேறு இனத்தை சேர்ந்த பறவைகள் உயிரிழக்கின்றன. ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற பகுதிகளில் மட்டுமே தற்போது தட்டுப்படும் கானமயில்கள் Wildlife Institute of India-வின் அறிவிப்பின் படி ஒவ்வொரு ஆண்டும் மின்சார கம்பிகளில் சிக்கி 18 உயிரிழக்கின்றன. இப்பறவைகளை காக்க ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் அமைய இருக்கும் சோலார் பேனல்களுக்கான மின் இணைப்பை தரைக்கு அடியில் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கி இருந்த நிலையில் அதனை எதிர்த்து வருகின்ற ஜூன் 29ம் தேதி அன்று மேல் முறையீடு செய்ய உள்ளனர்.

பார்வையற்ற பறவையா கானமயில்?

ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களின் சோலார் எரிசக்தி உற்பத்திக்கு பெரும் இடையூறாக இருக்கிறது என்று கானமயில் குறித்து சில ஆங்கில செய்தி நிறுவனங்கள் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தன. “குருட்டு பறவைகள்” வாழும் ”புறம்போக்கு நிலம்” என்று கானமயில்களையும், புல்வெளி சுற்றுச்சூழலையும் குறை மதிப்பிற்கு ஆளாக்கி இந்த கட்டுரைகள் வெளியிடப்பட்டிருந்தது. இது சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. பலரும் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப பிறகு தங்களின் செய்திகளின் உள்ளடக்கத்தை மாற்றினார்கள்.

கானமயில், பறக்கும் பறவைகளிலேயே அதிக எடை கொண்ட பறவையாகும். இப்பறவைகளுக்கு நேர்பார்வை கிடையாது. தங்களை தாக்க வரும் விலங்குகளிடம் இருந்து தப்பிப்பதற்கு ஏற்ற வகையில் கண்கள் பக்கவாட்டில் அமைந்திருப்பதால் ஒற்றை பார்வை திறனை (Monocular vision) கொண்டுள்ளது. இதனால் பெரும்பாலான சமயங்களில் மின் கம்பிகளில் பட்டு உயிரிழக்கும் அபாயத்தை சந்தித்து வருகின்றன. மேலும் இதன் இனச்சேர்க்கை மற்றும் வளரிளம் பறவைகளுக்கான உயிர்பிழைத்திருக்கும் வாய்ப்புகளும் சவாலானதாகவே இருக்கிறது. தரையில் முட்டையிடும் வழக்கம் கொண்டவை இப்பறவைகள். நாய்கள் மற்றும் இதர விலங்குகளின் நடமாட்டத்தால் அந்த முட்டை, உயிருள்ள ஒரு பறவையாக வாழ்வதற்கான சாத்தியத்தை குறைத்துவிடுகின்றன. மனித இடையூறுகள் இருப்பதாக உணரும் பட்சத்தில், இனச்சேர்க்கையை தாமதப்படுத்தும் உயிரினமாகவும் கானமயில் உள்ளது.

வேட்டையாடுதல், மின்கம்பிகள், முட்டைகளை நாய்கள் உட்கொள்ளுதல், விவசாயத்திற்காக வாழ்விடம் அழிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்படுதல், தொழிற்சாலைகள், உள்கட்டமைப்பு போன்ற காரணங்களால் தற்போது இதன் எண்ணிக்கை வெறும் 150 ஆக குறைந்துள்ளது.

”கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் – தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி”

என்ற மூதுரை பாடலில் ஔவையார் குறிப்பிட்டிருக்கும் கானல் மயில் என்பது தான் இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் கான மயில். நாம் நம் வாழ்வில் தினசரி காணும் மயில் பற்றியதல்ல. இந்தியாவில் 150க்கும் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் கானல் மயில் குறித்த சங்ககாலப் பாடல் இது. இன்று இந்த பறவையை தமிழகத்தில் எங்கும் காண முடியாது. ராஜஸ்தான், குஜராத் மற்றும் கர்நாடகாவில் உள்ள உலர்ந்த புல்வெளி பகுதிகளிலும் வறண்ட புதர்க்காடுகளிலும் வாழ்ந்து வருகின்றது கானமயில் என்று அழைக்கப்படும் கிரேட் இந்தியன் பஸ்டர்ட் ( Great Indian Bustard (GIB), அறிவியல் பெயர் – Ardeotis nigriceps ). வேட்டையாடுதல்களில் இருந்து இந்திய வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972-ன் கீழ் இப்பறவைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் புகழ் பெற்ற பறவை ஆராய்ச்சியாளர் சலீம் அலி, இந்தியாவின் தேசிய பறவையாக கானமயிலை அறிவிக்க வேண்டும் என்று 1960களில் இந்திய அரசை கேட்டுக் கொண்டார். இந்த அறிவிப்பு மட்டுமே இந்த பறவையை அழிவில் இருந்து காக்க உதவும் என்று அவர் நம்பினார். ஆனால் இதன் ஆங்கில பெயர் உச்சரிப்பு மற்றும் தகவமைப்பு போன்ற காரணங்களால் அந்த வாய்ப்பை இழந்தே விட்டது கானமயில்.

ராஜஸ்தானில் அதிக அளவில் இருக்கும் இந்த பறவை, குஜராத்தில் தங்களின் வாழ்விடங்களை கட்ச் வரை சுருக்கிக் கொண்டது. 1999ம் ஆண்டு 30 பறவைகள் இருந்த நிலையில், பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு 2007ம் ஆண்டு 48 ஆக உயர்ந்ததது. ஆனாலும் தொடர்ந்து பல்வேறு விபத்துகளில் சிக்கி இந்த பறவைகள் இறக்க தற்போது 5 பெண் கானமயில்களே கட்ச் பகுதியில் காணப்படுகிறது.

குஜராத்தின் அப்தசா பகுதியில் 2 கி.மீ பரப்பில் அதிக அளவு கானமயில்கள் வாழ்ந்து வந்த நிலையில் அப்பகுதி கானமயில்களின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. அந்த பகுதி உட்பட பல்வேறு இடங்களில் 5000 மெகா வாஅட் மின்சாரம் தயாரிக்க சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 5600 காற்றாலைகள் கட்ச் பகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Grassland ecosystem

பறவையை ”பருமனான, பார்வையற்ற” என்ற மோசமான வார்த்தைகளில் வர்ணித்தது மட்டும் அல்லாமல் அதன் வாழும் பகுதிகளை புறம்போக்கு (வேஸ்ட்லேண்ட்) அல்லது வாழ தகுதியற்ற பகுதிகள் என்றும் வகைமைப்படுத்தியுள்ளனர். இந்தியாவில் புல்வெளி காடுகளுக்கான பார்வையும் மதிப்பும் அது குறித்த புரிதல்களும் குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் மட்டும் ஆறு வகையான புல்வெளி வாழிடங்கள் உள்ளன. மரங்கள் அதிகமாக இருக்கும் காடுகளில் நிலவும் பல்லுயிர் பெருக்க சூழலைப் போன்றே, இந்த புல்வெளிகளை நம்பி நூற்றுக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. சமயங்களில் இந்த நிலங்களை வாழ தகுதியற்ற நிலங்கள் என்று கருதி குப்பைகள், கட்டுமான சேதாரங்கள் போன்றவற்றை கொண்டு வந்து கொட்டுவதும் வழக்கமான ஒன்றாக அமைந்துவிட்டது. மேலும் “மரம் வளர்க்கும்” திட்டத்தில் புல்வெளி பிரதேசங்களை சீர்படுத்தி மரம் நடும் அபத்தமான சூழல்களும் நிலவி வருகின்றன.

வெப்பமண்டல, மித வெப்பமண்டல, டுண்ட்ரா, ஈரபுல்வெளி, பாலைவன மற்றும் மோண்டேன் வகை புல்வெளிகள் காணப்படுகின்றன. போதுமான புல்வெளி நிலங்கள் இல்லாத காரணத்தால், தாவர உண்ணிகளின் எண்ணிக்கை குறைவதும், உணவுக்காக அவை மக்கள் வாழும் பகுதிகளுக்கு வருவதும் அதிகரிக்கிறது. அதே போன்று தான் தாவர உண்ணிகளின் எண்ணிக்கை குறைவதால் ஊன் உண்ணிகளின் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு அதிகமாக வருகின்றன. இந்த வகையான புல்வெளிகள் ஒன்றும் புறம்போக்கும் நிலங்கள் அல்ல. மாறாக இவை சமநிலையை உருவாக்கும் வாழிடமாக இருக்கிறது.

மின்கம்பிகள் தரைக்கு அடியில் புதைக்கப்பட்டால் பாதிப்பு ஏற்படாதா?

பறவையை பற்றியும் அதன் வாழிடம் குறித்தும் அறிந்து கொண்டோம். ”பசுமை எரிசக்தி” என்பது தான் எதிர்காலமாக இருக்கும். எண்ணெய் வளங்கள் எல்லாம் குறையும் அபாயம் ஏற்பட்டால், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy) நம்மை காக்கும் என்று பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பின் படி, குறைந்த வோல்ட்டேஜ் கொண்ட மின் கம்பிகளை நிலத்துக்கு அடியே புதைப்பது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக அமையுமா? என்ற கேள்வியையும் நாம் புறந்தள்ளிவிட இயலாது.

20% சூரிய ஆற்றல் மட்டுமே மின்சாரமாக மாற்றப்படுகிறது. 80% சூரிய வெளிச்சம் சிதறடிக்கப்பட்டு அந்த நிலப்பரப்பின் காலநிலையை மாற்றுகிறது. ஒவ்வொரு பேனலையும் உருவாக்கும் போது குறைந்ததது 5 டன் அளவிற்கு கார்பன் – டை – ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது. பார்ப்பதற்கு நீர் பரப்பு போன்று இருப்பதால் பறவைகள் இதில் மோதி உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது என்று சோலார் பேனல்கள் வைப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அப்ஸ்ட்ரீம் எக்காலஜி (Upstream ecology) என்ற இன்ஸ்டகிராம் பக்கம் கூடுதல் தகவல்களை வெளியிட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/india/great-indian-bustard-habitat-loss-and-reasons-behind-population-decline-318018/

தமிழக புதிய டிஜிபி யார்? டெல்லியில் முக்கிய ஆலோசனை

 

தமிழ்நாட்டின் டிஜிபி ஜே.கே.திரிபாதியின் பணி காலம் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் புதிய டிஜிபியை முடிவு செய்வதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மாநில தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர்.

தமிழ்நாடு தலைமை டிஜிபியாக உள்ள ஜே.கே.திரிபாதியின் பணி காலம் ஜூன் 30ம் தேதி முடிவடைகிறது. மாநில காவல்துறை தலைமையான டிஜிபியை நியமிக்க அதிகாரிகளின் குழுவை இறுதி செய்ய புதுடில்லியில் நடைபெறவுள்ள முக்கியமான கூட்டத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், யூ.பி.எஸ்.சி தமிழக அரசிடமிருந்து தகுதியான அதிகாரிகளின் திருத்தப்பட்ட பட்டியலை கேட்டது.

அதில் 1987 முதல் 1989 வரையிலான ஐ.பி.எஸ். பேட்ச்களைச் சேர்ந்த 7 அதிகாரிகளின் பெயர்களை அனுப்புவதாக ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் வட்டாரங்கள் 1990 மற்றும் 1991 பேட்ச்களைச் சேர்ந்த 9 ஏடிஜிபி ரேங்கில் உள்ள அதிகாரிகளின் பெயர்கள் உட்பட உள்ள திருத்தப்பட்ட பட்டியலை யு.பி.எஸ்.சி-க்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

இந்த பட்டியலில், தமிழ்நாடு டிஜிபிக்கான ரேஸில் 1987 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த சி. சைலேந்திர பாபு ஐபிஎஸ் மிகவும் சீனியராக உள்ளார். அதே பேட்ச்சில் கரண் சிங்காவும் உள்ளார். மூன்றாவதாக 1988ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த சஞ்சய் அரோராவும் இருக்கிறார். இவர் மத்திய பிரதிநிதியாக உள்ளார். புதன்கிழமை மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சிறப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

டிஜிபிக்கான பரிந்துரை பட்டியலில் மற்ற பேட்ச்களைச் சேர்ந்த சுனில் குமார் சிங் மற்றும் பி.கந்தசாமி ஐபிஎஸ் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை பிரிவு தலைவராக இருக்கும் கந்தசாமி ஐபிஎஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய நம்பிக்கையைப் பெற்றவராக உள்ளார். அதனால், டிஜிபி ரேஸில் கந்தசாமி பெயரும் உள்ளது.

1989ம் ஆண்டு பேட்ச்சில் எம்.டி. ஷகீல் அக்தர், பிரஜ் கிஷோர் ரவி ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர். யு.பி.எஸ்.சிக்கு அனுப்பப்பட்ட புதிய பட்டியலில் ஷங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், அபாஷ்குமார், மத்தியப் பணியில் உள்ள டி.வி.ரவிச்சந்திரன், 1990 பேட்ச்சில் சீமா அகர்வால், 1991 பேட்ச்சில் அம்ரேஷ் பூஜாரி, எம்.ரவ், கே.ஜெயந்த் முரளி, கருணா சாகர் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஐ.பி.எஸ் காவல் பணியில் 30 ஆண்டுகள் பணி அனுபவத்துடன் டிஜிபி மற்றும் ஏடிஜிபி பதவிகளில் பணியாற்றுகிறார்கள்.

டிஜிபி நியமனம் தொடர்பான பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ஒரு மாநிலத்தில் டிஜிபியாக நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரி குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.

டிஜிபி பதவிக்கு தகுதியுள்ளவர்களின் பரிந்துரை பட்டியலில் யுபிஎஸ்சி 2017ல் 5 பெயர்களையும், 2019ல் 3 பெயர்களையும் வேண்டும் என தெளிவுபடுத்தியிருந்தாலும் மாநில அரசு 5 பெயர்களை பரிந்துரைத்து வலியுறுத்த முடியும். இது தமிழ்நாடு போலீஸ் ஸ்தாபன சட்டத்தின் கீழ் விதிகள் மூலம், யுபிஎஸ்சியால் காவல்துறைக்கு அனுப்பப்படும் பட்டியலில் இருந்து மாநில அரசு யாரை வேண்டுமானலும் தேர்வு செய்யலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் யுபிஎஸ்சி அலுவலகத்தில் இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், தற்போதைய டிஜிபி ஜே.கே.திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இதற்காக இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளனர். விரைவில் தமிழ்நாட்டின் டிஜிபி யார் என்பது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/who-is-next-new-dgp-of-tamil-nadu-upsc-held-important-consultative-meeting-in-delhi-318064/

3 எம்பி பதவிகளுக்கு ராஜ்யசபா இடைத்தேர்தல்: ஒரு இடம் கேட்கும் காங்கிரஸ்

 

Rajya Sabha By Election Update Tamilnadu : மாநிலங்களவையில் காலியாக உள்ள தமிழகத்திற்காக 3 இடங்களுக்கு இடைத்தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த 3 இடங்களையும் கைப்பற்றும் முயற்சியில் திமுக களமிறங்கியுள்ளது.

மாநிலங்களவையில் எம்பியாக இருந்த அதிமுகவை சேர்ந்த ஏ முகமது ஜான் மார்ச் 23 அன்று மரணமடைந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  கே.பி.முனுசாமி மற்றும் ஆர் வைதிலிங்கம் ஆகியோர் தங்களது மாநிலங்களவை எம்பி  பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் தற்போது மாநிலங்களாவையில் தமிழகத்திற்கான மூன்று இடங்கள் காலியாக உள்ளது. 

இந்த காலி இடங்களுக்காக இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சமீபத்தில், இந்த இடைத்தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று தி.மு.க. இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக திமுக அளித்த கோரிக்கை மனுவில், தேர்தலின் தாமதம் தமிழகத்தை மாநிலங்களவையில் போதுமான அளவில் பிரதிநிதித்துவப்படுத்துவதைத் தடுக்கிறது என்றும், இது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது. இதனால் அரசியலமைப்பின் கீழ் மூன்று இடங்களுக்கும் தனித்தனியாக இடைத்தேர்தல்களை நடத்த வேண்டும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாநிலங்களவை தொகுதிக்கு போட்டியிட தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வரும் திமுகவில், இரண்டாம் நிலை தலைவர்களில் இந்த பதவிக்காக போட்டியிடும் சூழ்ல உருவாகியுள்ளது. இதில் தங்க தமிழ் செல்வனுக்கும் கார்த்திகேயா சிவசநாதிபதி 2 இடங்களை ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இருவரும் ஏற்கனவே சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட நிலையில், மீண்டும் அவர்களுக்கே வாய்ப்பு வழங்குவது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்திக்கொள்ளாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதை கட்சியினர் விரும்பவில்லை என்றும், சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் இருக்கும் நிலையில், அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் சட்டசபை தேர்தலில் 40 தொகுதிகள் வரை கேட்டு 25 தொகுதிகளை பெற்றுக்கொண்ட காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடத்தை கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சட்டசபை தேர்தலின்போதேகாங்கிர திமுக இடையே வாய்வழி ஒப்பந்தாமாக காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது நடைபெறுவது இடைத்தேர்தல் என்பதால், பதவிக்காலம் குறைவாக உள்ளது. இதனால் முழு பதவிக்காலத்தையும் எதிர்நோக்கியுள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் முழு பயன் தராது என்றும் கூறப்படுகிறது.

ஆனால் எம்பி ஆக இருந்து மரணமடைந்த முகமது ஜான் மற்றும் ராஜினாமா செய்த வைத்தியலிங்கம் ஆகியோரின் பதவிக்காலம் குறைந்த ஆண்டுகள் என்ற நிலையில், அதிமுகவில் ராஜினாமா செய்த மற்றொரு எம்பி கே.பி.முனுசாமிக்கு இன்னும் 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளதால், அந்த இடத்தை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது. புதிதாக 6 ஆண்டுகள் பதவிக்காலம் வேண்டும் என்றால் மேலும் ஒரு வருடம் காத்திருக்கு வேண்டும் என்பதால், ஒரு வருடம் குறைந்தாலும் பரவாயில்லை என்று காங்கிரஸ் கட்சி எண்ணுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-second-rung-leaders-heavy-competition-to-rajya-sabha-mp-election-317975/

இணைய அறிவுசார் சொத்துகளை பாதுகாக்கும் டி.எம்.சி.ஏ சட்டம் என்றால் என்ன?

 28 06 2021 protection of intellectual property online : டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டத்தை (டி.எம்.சி.ஏ) (Digital Millennium Copyright Act (DMCA)) மீறியதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கு ஒரு மணி நேரத்திற்கு முடக்கப்பட்டது. உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) உறுப்பு நாடுகளால் கையெழுத்திடப்பட்ட இரண்டு 1996 ஒப்பந்தங்களை அமல்படுத்துவதை DMCA மேற்பார்வையிடுகிறது.

டி.எம்.சி.ஏ என்றால் என்ன, இது WIPO ஒப்பந்தங்களை செயல்படுத்துவதை எவ்வாறு உறுதி செய்கிறது?

டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டம் அல்லது டி.எம்.சி.ஏ என்பது 1998ம் ஆண்டு அமெரிக்காவில் இயற்றப்பட்ட சட்டமாகும். இது இணையத்தில் அறிவுசார் சொத்துக்களை அங்கீகரிக்கும் உலகின் முதல் சட்டங்களில் ஒன்றாகும். அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனால் கையொப்பமிடப்பட்ட இந்த சட்டம், 1996இல் உலக அறிவுசார் சொத்து அமைப்பின் (WIPO) உறுப்பு நாடுகளால் கையெழுத்திடப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதை மேற்பார்வையிடுகிறது.

WIPO உறுப்பினர்கள் 1996 டிசம்பரில் WIPO பதிப்புரிமை ஒப்பந்தம் ( WIPO Copyright Treaty) மற்றும் WIPO செயல்திறன் மற்றும் ஒலிப்பதிவு ஒப்பந்தம் ( WIPO Performances and Phonograms Treaty) ஆகிய இரண்டு ஒப்பந்தங்களுக்கு ஒப்புக் கொண்டனர்.

வெவ்வேறு நாடுகளில் உள்ள குடிமக்களால் உருவாக்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமைகளுக்கு உறுப்புநாடுகளும், கையொப்பமிட்ட நாடுகளும் பாதுகாப்பு மற்றும் நீதியை வழங்க வேண்டும் என்று இந்த இரண்டு ஒப்பந்தங்களும் வேண்டுகிறது. உள்நாட்டில் அறிவுசார் சொத்துகளுக்கு வழங்கப்படும் உரிமைகளில் சற்றும் குறைவில்லாமல் வெளிநாட்டினரின் அறிவுசார் சொத்துகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

பதிப்புரிமை பெற்ற படைப்புகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப நடவடிக்கைகளில் இருந்து நழுவி மேம்பட்ட வழிமுறைகளை பின்பற்றி அறிவுசார் சொத்துகள் திருடப்படுவதை தடுக்க ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்கள் உறுதி செய்வதையும் இது கட்டாயப்படுத்துகிறது. இது டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கு தேவையான சர்வதேச சட்டப் பாதுகாப்பையும் வழங்குகிறது.

WIPO என்றால் என்ன, இது இணையத்தில் உள்ளடக்கத்தைப் பாதுகாப்பதை எவ்வாறு உறுதி செய்கிறது?

1990களின் பிற்பகுதியில் இணையத்தின் விரைவான வணிகமயமாக்கலுடன், நிலையான விளம்பர பேனல்கள் இணையத்தில் காண்பிக்கப்படுவதால், வலைத்தள உரிமையாளர்கள் பயனர்கள் தங்கள் வலைப்பக்கத்தில் அதிக நேரம் செலவழிக்க வேண்டியது முக்கியமானது. இதற்காக, புதிய உள்ளடக்கம் (content) படைப்பாளர்களால் உருவாக்கப்பட்டது மற்றும் இணையத்தில் பகிரப்பட்டது. உள்ளடக்கத்தை சொந்தமாக உருவாக்காத நேர்மையற்ற வலைத்தளங்கள் அல்லது பயனர்களால் உள்ளடக்கத்தை நகலெடுக்கும் போது சிக்கல் தொடங்கியது. மேலும், இணையம் உலகளவில் விரிவடைந்ததால், உள்ளடக்கம் தோன்றிய நாடைத் தவிர வேறு நாடுகளின் வலைத்தளங்களும் வலைத்தளங்களால் உருவாக்கப்பட்ட தனித்துவமான உள்ளடக்கத்தை நகலெடுக்கத் (copy )தொடங்கின.

இதனை தடுப்பதற்காக 1967ம் ஆண்டு உருவாக்கப்பட்ட WIPO டிஜிட்டல் உள்ளடங்களுக்கும் பதிப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்து பாதுகாப்பையும் வழங்க ஒப்புக் கொண்டது. இன்றைய தேதிப்படி இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளும் (193) இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.

டி.எம்.சி.ஏ அறிவிப்பை யார் உருவாக்க முடியும், அவை எவ்வாறு நிறுவனங்கள் அல்லது வலைத்தளங்களுக்கு அனுப்பப்படுகின்றன?

இந்த வகையான உள்ளடக்கங்களும், அங்கீகரிக்கப்பட்ட வலைதளங்களில் இருந்து நகலெடுக்கப்பட்டுள்ளது என்று நம்பும் படைப்பாளரும் அவர்களின் அறிவுசார் சொத்து திருடப்பட்டதாக அல்லது மீறப்பட்டதாகக் கூறி ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்யலாம்.

உள்ளடக்கத்தை வழங்கிய இணையத்தில் படைப்பாளர் இந்த விவகாரம் தொடர்பாக அணுகலாம். அல்லது அல்லது டி.எம்.சி.ஏ.காம் போன்ற மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள், வல்லுநர்களின் குழுவைப் பயன்படுத்தி திருடப்பட்ட உள்ளடக்கத்திற்கு சிறிய அபாரதம் பெற முடியும்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அல்லது ட்விட்டர் போன்ற சமூக ஊடக இடைத்தரகர்களைப் பொறுத்தவரை, உள்ளடக்க படைப்பாளர்கள் நேரடியாக அசல் படைப்பாளிகள் என்பதற்கான ஆதாரத்துடன் அந்த தளங்களை அணுகலாம். இந்த நிறுவனங்கள் WIPO உடன்படிக்கைக்கு கையொப்பமிட்ட நாடுகளில் செயல்படுவதால், செல்லுபடியாகும் மற்றும் சட்டபூர்வமான DMCA தரமிறக்குதல் அறிவிப்பைப் பெற்றால், அந்த உள்ளடக்கத்தை அகற்ற அவர்கள் கடமைப்பட்டுள்ளனர்.

இருப்பினும், தளங்கள், உள்ளடக்க மோசடி குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட மற்ற பயனர்களுக்கும், எதிர் அறிவிப்பை தாக்கல் செய்வதன் மூலம் டி.எம்.சி.ஏ அறிவிப்புக்கு பதிலளிக்க ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. எந்தக் கட்சி உண்மையைச் சொல்கிறது என்பதை அந்த தளமே தீர்மானிக்கும். அதுவரை உள்ளடக்கம் மறைக்கப்பட்டிருக்கும்.

source https://tamil.indianexpress.com/explained/what-are-dmca-notices-for-protection-of-intellectual-property-online-317884/

உணவு பொருட்களின் விலை அதிகரிக்குமா?

28 06 2021  பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் பீப்பாய் ஒன்றுக்கு 75 டாலராக அதிகரித்து வெள்ளிக்கிழமை 76.18 டாலராக முடிவடைந்தது. இது 29 அக்டோபர் 2018 முதல் பார்க்கும்போது மிகவும் அதிகரித்த விலையாகும். ப்ரெண்ட் ஒரு வருடத்திற்கு முன்பு பீப்பாய்க்கு ஒன்றுக்கு 41 டாலருக்கு மேல் வர்த்தகம் ஆனது. இந்திய நுகர்வோருக்கு முழுமையாக அனுப்பப்படுகிறது. எரிபொருள் விலை உயர்வால் உணவின் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா மற்றும் உலகம்

முக்கிய விவசாய பொருட்களின் உலகளாவிய விலைகளை அட்டவணை 1 காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது அதிகரித்துள்ளது. ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) உலக உணவு விலைக் குறியீடு (FPI) மே மாதத்தில் 127.1 புள்ளிகளைத் தொட்டது. இது செப்டம்பர் 2011 முதல் கணக்கிடும் போது அதன் உயர்ந்த மதிப்பாகும்.

ஆனால் எரிபொருளைப் போலல்லாமல், உலகளாவிய உணவு விலைகளின் அதிகரிப்பு இந்தியாவில் நுகர்வோர் பணம் செலுத்துவதில் பிரதிபலிக்கவில்லை. இந்தியாவில் ஆண்டு நுகர்வோர் உணவு விலைக் குறியீடு (CFPI) பணவீக்கம், மே மாதத்தில் 5% ஆக இருந்தது, அதே மாதத்தில் FAO-FPI இல் ஆண்டுக்கு ஆண்டு 39.7% உயர்வைக் காட்டிலும் மிகக் குறைவாக இருந்தது.

CFPI மற்றும் FAO-FPI பணவீக்க விகிதங்கள் பிப்ரவரி 2020 வரை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்ததாலும், அதன்பிறகு அந்தக் காலம் குறிப்பிடத்தக்க மாறுபாட்டை கண்டது. கொரோனா பரவிய 2020 மார்ச் மாதத்திற்குப் பிறகு உலகளாவிய உணவு பணவீக்கம் செயலிழந்தது. மறுபுறம், இந்தியாவில் சில்லறை உணவு பணவீக்கம் நவம்பர் வரை இரட்டை இலக்கங்களைச் சுற்றி வந்தது. இருப்பினும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு உலகளாவிய உணவு விலைகள் மீட்கப்படுவதன் வேகத்தை அதிகரித்துள்ளது.

வேறுபாடு ஏன்?

செப்டம்பர் முதல் அக்டோபர் வரை சர்வதேச உணவு விலைகள் அதிகரித்திருப்பதற்கு காரணம் பொருளாதார முடக்கத்தாலும், விநியோக சங்கிலிகளை மீட்டெடுப்பதற்கு நேரம் தேவைப்பட்டதாலும் தான். அப்போது சீன கையிருப்பு மிகவும் உதவியது. பிரேசில், அர்ஜென்டினா, உக்ரைன், தாய்லாந்து மற்றும் அமெரிக்காவில் கூட வறண்ட வானிலையால் உற்பத்தி குறைபாடு ஏற்பட்டது.

இந்தியாவில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பருவ மழை பெய்ததால் விவசாயம் நன்கு இருந்தது. ஆஸ்திரேலியா மற்றும் கனடாவைத் தவிர கடுமையான வானிலை தொடர்பான பிரச்சனைகளை இந்தியா எதிர்கொள்ளவில்லை. டிசம்பர் முதல் உணவு பணவீக்கம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. பருவமழைக்குப் பிந்தைய கரிப் பயிர் அறுவடை செய்யப்பட்டு சந்தைகளுக்கு வந்துள்ளது.

Table 2 உள்நாட்டு சில்லறை உணவு பொருட்கள் விலையை காட்டுகிறது. இவை பெரும்பாலும் இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களான சமையல் எண்ணெய்கள் மற்றும் பருப்பு வகைகளில் அதிகரித்துள்ளன.இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 13-15 மில்லியன் டன் (எம்டி) சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்கிறது மற்றும் வெறும் 7.5-8.5 மெட்ரிக் டன் மட்டுமே உற்பத்தி செய்கிறது.

பருப்பு வகைகளில், உள்நாட்டு உற்பத்தி கடந்த ஐந்து ஆண்டுகளில் 15-16 மெட்ரிக் டன்னிலிருந்து 22-23 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இறக்குமதியும் 2.5-3 மெட்ரிக் டன்னுக்கு பாதியாக குறைந்துவிட்டாலும், அவை உள்நாட்டு விலைகளில் கணிசமான செல்வாக்கை செலுத்துகின்றன. சமையல் எண்ணெய்கள் மற்றும் பருப்பு வகைகளைப் பொறுத்தவரை, எரிபொருளைப் போலவே சர்வதேசத்திலிருந்து உள்நாட்டு சந்தைகளுக்கு தானாகவே விலைகள் மாறுகிறது. ஆனால் தானியங்கள், சர்க்கரை, பால் மற்றும் பிரதான காய்கறிகளுக்கும் இது பொருந்தவில்லை.

சமையல் எண்ணெய்கள் மற்றும் பருப்பு வகைகள் தவிர மற்ற உணவுப் பொருட்களில் ஒப்பீட்டளவில் குறைந்த உள்நாட்டு பணவீக்கம் இரண்டு முக்கிய காரணிகளால் கூறப்படுகிறது. நாட்டில் முக்கியமாக உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான பயிர்களில் சப்ளை பற்றாக்குறை பருவமழை மற்றும் கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டது. உணவகங்கள், ஸ்வீட், மீட் கடைகள், விடுதிகள் மற்றும் கேன்டீன்கள் மூடப்பட்டது அல்லது குறைந்த திறனில் இயங்கியது. திருமண வரவேற்பு, பிற பொது விழாக்கள் தவிர உணவு தேவை என்பது பெரும்பாலும் வீடுகளுக்கு மட்டுமே இருந்தது. ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளின் சுருக்கத்தால் வேலை மற்றும் வருமான இழப்புகளை சந்திக்க நேர்ந்த பல வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டது.

வரவிருக்கும் மாதங்களில் இந்தியாவில் உணவு பணவீக்கம் நான்கு விதங்களில் தீர்மானிக்கப்படுகிறது. முதலாவது சர்வதேச விலைகள், இது ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளுக்கு முக்கியமானது. தற்போதைய எழுச்சி தற்காலிக விநியோக பக்க இடையூறுகளின் விளைவாக இருந்ததா அல்லது 2007-2013 காலப்பகுதியில் காணப்பட்ட ஒரு பெரிய முன்னோடியாக இருந்ததா என்பது தெளிவாக இல்லை. மே 1 இல் பெரும்பாலான வேளாண் பொருட்களின் உலகளாவிய விலையில் சமீபத்திய உச்சத்தை எட்டியதாக அட்டவணை 1 காட்டுகிறது. அப்போதிருந்து வீழ்ச்சி கவனிக்கப்படுகிறது. குறிப்பாக சமையல் எண்ணெய்களில் கவனிக்கப்படுகிறது, அவை உண்மையிலேயே அதிகமாக உள்ளன.

இரண்டாவது பருவமழை: மே மாதத்தில் 74% உபரி மழையைப் பெற்றிருந்தாலும், தென்மேற்கு பருவமழை (ஜூன்-செப்டம்பர்) இதுவரை சராசரியாக 18% க்கும் அதிகமான மழைப்பொழிவைப் பதிவு செய்துள்ளது. இது விவசாயிகளால் பயிரிடுவதை ஊக்குவிக்க வேண்டும், மேலும், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளின் கீழ் நிலங்களை விரிவுபடுத்த வேண்டும். உற்பத்தி பகுதி மற்றும் மகசூல் இரண்டின் செயல்பாடாக இருப்பதால், ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் காரீப் பயிர்கள் தாவர வளர்ச்சியில் மழைப்பொழிவிலும் முக்கியப் பங்கு உள்ளது.

மூன்றாவது எரிபொருள் விலை அதிகரிப்பு: இதன்மூலம் நுகர்வோர் வாங்கும் பொருட்கள் விலை உயர வாய்ப்புள்ளது. உதாரணமாக பாலை எடுத்துக்கொண்டால், பால் பண்ணைகள் அதன் போக்குவரத்து செலவுகள், முதலில் கிராம சேகரிப்பு மையங்களிலிருந்து 2000 முதல் 3000 லிட்டர் திறன் கொண்ட மினி லாரிகளில் பால் ஆலைகளுக்கு எடுத்து வரப்படுகிறது. Pasteurised செய்யப்பட்ட மற்றும் பேக் செய்யப்பட்ட பால் மேலும் 10,000 முதல் 15,000 லிட்டர் டேங்கர்களில் ஆலைகளில் இருந்து சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் டீசல் விலை லிட்டருக்கு ரூ .15 முதல் 16 உயர்ந்துள்ள போதிலும், பெரும்பாலான பால்பண்ணைகள் தங்கள் பால் விகிதங்களை உயர்த்தவில்லை. அதற்கு பதிலாக பலர் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விலைகளை குறைத்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் 3.5% கொழுப்பு மற்றும் 8.5% திடப்பொருட்களைக் கொண்ட பாலின் கொள்முதல் விலை பிப்ரவரி-மார்ச் மாதங்களில் லிட்டருக்கு 31-32 ரூபாயாக ஆக இருந்தது (இரண்டாவது அலைக்கு முந்தையது) இப்போது 21-25 ரூபாயாக ஆக குறைந்துள்ளது. இதனால், எரிபொருள் செலவை கடந்து செல்வது நுகர்வோர் செலுத்தும் விலைகளை அதிகரிப்பதன் மூலம் அல்லாமல், உற்பத்தியாளர்களுக்கு செலுத்தப்படும் விலைகளை குறைப்பதன் மூலம் நடந்துள்ளது.

இறுதியாக அரசியல்: முதல் காலகட்டத்தில் உணவு பணவீக்கம் மோசமாக இருந்தது. CFPI யின் வருடாந்திர உயர்வு ஜூன் 2014 முதல் மே 2019 வரை சராசரியாக 3.3% ஆக இருந்தது. அதே பணவீக்கம் ஜூன் 2019 முதல் மே 2021 வரை அதன் இரண்டாவது காலப்பகுதியில் சராசரியாக 7.4% ஆக உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த அரசை கட்டாயப்படுத்தியுள்ளன. மேலும் கோதுமை மற்றும் நெல் ஆகியவற்றை குறிப்பிட்ட அளவு கொள்முதல் செய்யவும் வைத்தது. உத்தரபிரதேசத்தில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தல்களுடன் சர்க்கரை விலை அதிகரிப்பு, கரும்பு பயிரிடுவோருக்கு ஆலைகள் அதிக கட்டணம் செலுத்த உதவுகின்றன.

source https://tamil.indianexpress.com/explained/global-oil-price-hike-will-food-become-costlier-317963/

திங்கள், 28 ஜூன், 2021

பாளையங்கோட்டை ஜெயில் கைதி கொலை: 60 நாட்களை கடந்தும் உடலை வாங்க மறுத்து போராட்டம்

 inmate muthumano lockup death, muthumano lockup death, in Palayamkottai central jail, முத்துமனோ, பாளையம் கோட்டை மத்திய சிறையில் கைதி கொலை, முத்துமனோவிற்கு நீதி எங்கே, தேவேந்திரகுல வேளாளர், muthumano relatives and political parties protest for justice, justice for muthumano, palayamkottai, tirunelveli, vagaikulam

பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்த முத்துமனோ (27) சிறைக் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலில் ஏப்ரல் 22ம் தேதி அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில், தெவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இயக்கங்கள் மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் முத்துமனோ மரணத்துக்கு நீதி கேட்டு சமூக ஊடகங்களில் குரல் எழுப்பியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளத்தை சேர்ந்த பாவநாசம் மகன் முத்துமனோ. இவர் பணகுடியில் இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் போலீசார் அவரைக் கைது செய்து கடந்த வாரம் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்து வந்தனர். அப்போது, அங்கே சிறைக் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கைதி முத்துமனோ ஏப்ரல் 22ம் தேதி அடித்து கொலை செய்யப்பட்டார்.

விசாரணைக் கைதி முத்துமனோ கொலை குறித்து பெருமாள்புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறையிலிருக்கும் 7 பேரை கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிறையிலுள்ள அலுவலர்கள், காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கைதி முத்துமனோ கொலை வழக்கில் சிறைத்துறை அதிகாரிகள், காவலர்களை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவருடைய உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், வாகைகுளம் கிராமத்தினரும் தொடந்து 66 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் இயக்கங்கள், அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சமூக ஊடகங்களில் #முத்துமனோவிற்கு நீதி எங்கே என்று ட்வீட் செய்து கவனத்தை ஈர்த்தனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/muthumano-lockup-death-in-palayamkottai-central-jail-his-relatives-and-political-parties-protest-for-justice-317814/

புது வகையான தாக்குதல்; ஜம்மு விமானப்படை தளத்தில் வீசப்பட்ட 2 வெடிகுண்டுகள்

28.06.2021  Indian Air Force base in Jammu : ஞாயிற்று கிழமை காலை ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ட்ரோன் மூலம் இரண்டு வெடிகுண்டுகள் கீழே போடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இது போன்று தாக்குதல் நடைபெறுவது இதுவே முதல்முறை.

அதிகாலை 1.37 மற்றும் 1.42 மணி அளவில் இரண்டு வெடிகுண்டுகள் இவ்வாறு போடப்பட்டு தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு விமானப்படை அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர்.

ஒரு கட்டிடத்தின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. ஆனால் விமானங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இந்த தாக்குதலில் மதிப்புமிக்க ஆயுதங்கள் எதுவும் சேதமடையவில்லை.

இந்த தாக்குதலை நடத்த சில வான்வழி தளங்கள் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் இது ஒரு ட்ரோன் மூலம் தான் நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் இருந்ததா என்பது விசாரணைக்குரிய விஷயம் என்று ஒரு அதிகாரி கூறினார்.

இந்த விமானப்படை தளம் பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையில் இருந்து 14-15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஜம்மு பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன் இதற்கு முன்பு 12 கி.மீ தூரம் வரை உள்ளே வந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய எல்லைப் பகுதிக்குள் இருந்து இந்த ட்ரோன் இயக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியங்களை நிராகரிக்க இயலாது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.


பயங்கரவாத தாக்குதலை நடத்த ட்ரோன் பயன்படுத்துவது நாட்டிற்கு ஒரு புதிய பாதுகாப்பு அச்சுறுத்தலின் தொடக்கத்தை குறிக்கிறது. ஆயுதமேந்திய ட்ரோன்களின் அச்சுறுத்தல் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய பாதுகாப்பு துறையால் விவாதிக்கப்பட்டது.

இரண்டு தாக்குதல்களில் ஒன்று கட்டிடத்தின் கூரையை சேதமாக்கியுள்ளது. மற்றொன்று தரையில் விழுந்து சேதம் அடைந்தது. வெடிக்கும் சப்தம் ஒரு கி.மீக்கு அப்பால் வரையில் கேட்டதால் இப்பகுதியில் வாழும் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். காயமடைந்த இரண்டு விமானப்படை வீரர்களான வாரண்ட் அதிகாரி அரவிந்த் சிங் மற்றும் முன்னணி விமானப்படை எஸ் கே சிங் ஆகியோருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. புலனாய்வு வட்டாரங்கள் மற்றும் அங்கு பணியாற்றும் வீரர்கள் யாரும் ட்ரோன் சப்தத்தை கேட்டதாக தெரிவிக்கவில்லை.

காயமடைந்த ஊழியர்கள் ஒரு குண்டுவெடிப்பைக் கேட்ட பின்னர் அவர்கள் கட்டிடத்திலிருந்து வெளியே வந்ததாகவும், இரண்டாவது குண்டுவெடிப்பில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது என்றும் அவர்கள் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

5 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களுடன் லஷ்கர் – இ – தய்பா இயக்கத்தை சேர்ந்த ஒருவர் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

ஜம்முவில் கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் குண்டுவெடிப்பு நடத்த பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் முகேஷ் சிங், லஷ்கர் செயல்பாட்டாளர் இந்த தாக்குதல் தொடர்பாக விசாரிக்கப்படுவார் என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீர் தலைவர்களை பிரதமர் மோடி டெல்லியில் சந்தித்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அங்கீகாரங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு மத்திய அரசு நடத்திய மிக முக்கியமான நடைமுறைகளில் ஒன்றாகும்.

ஜம்முவில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக வெளியிடப்பட்ட சிறு அறிக்கை ஒன்றில் ட்ரோனின் பயன்பாடு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஜம்மு விமானப்படை நிலையத்தின் தொழில்நுட்ப பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு குறை செயல்திறன் கொண்ட இரண்டு வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றதாகவும், ஒன்றில் கட்டிடத்தின் மேற்கூரை சேதம் அடைந்ததாகவும், மற்றொன்று திறந்த வெளியில் வெடித்ததாகவும் அறிவித்துள்ளது. “எந்த உபகரணத்திற்கும் சேதம் ஏற்படவில்லை. சிவில் ஏஜென்சிகளுடன் விசாரணை நடந்து வருகிறது” என்று அந்த ட்விட்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தாக்குதலின் அனைத்து கோணங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் டெல்லியில் தெரிவித்தார். விமானங்கள் கிளம்பும் இடத்தை இலக்காக கொண்டு இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் அதற்கு அருகே உள்ள கட்டிடம் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது என்று ஐ.ஏ.எஃப். அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் அருகே உள்ள சர்வதேச எல்லை மற்றும் எல்.ஓ.சி. பகுதிகளில் சமீபத்தில் ஆளில்லா விமானம் மூலமாக ஆயுதங்கள் வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

அமெரிக்கா தயாரித்த எம் 4 அரை தானியங்கி கார்பைன், இரண்டு பத்திரிகைகள், 60 சுற்று வெடிமருந்துகள் மற்றும் ஏழு சீன கையெறி குண்டுகளை ஏற்றிச் சென்ற ட்ரோன் கடந்த ஆண்டு ஜூன் 20ம் தேதி அன்று, கத்துவா மாவட்டத்தின் சர்வதேச எல்லையில் உள்ள ரத்துவா பகுதியில் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

கடந்த சில மாதங்களாக, ஜம்மு பிரிவில் பல இடங்களில் “பிஐஏ” என்று குறிக்கப்பட்ட விமான வடிவ பலூன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த பலூன்களில் சில இந்தியாவின் எல்லைக்குள் மிகவும் ஆழமாக பறக்க முடிந்தது. ஜம்மு விமானப்படை நிலையம் மீதான பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் 16 மற்றும் 18 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் தேசிய பாதுகாப்பு காவலர் (என்எஸ்ஜி) குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடந்த இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

source https://tamil.indianexpress.com/india/a-new-kind-of-terror-two-bombs-fall-on-indian-air-force-base-in-jammu-317861/

உயர்நீதிமன்றத்திற்கு உதயநிதி வைத்த முக்கிய கோரிக்கை

 வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை பார் கவுன்சில் வளாகத்தில்  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி இன்று தொடங்கிவைத்தார். நிகழ்வில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி,  “தடுப்பூசியைத் தவிர வேறு எதுவும் நோய்த்தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க உதவாது. கொரோனா 2ம் அலையைக் கட்டுப்படுத்த நாம் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். விழிப்புணர்வை உண்டாக்கி நோய்த்தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். 

திமுக எம்.எல்.ஏ உதயநிதி பேசுகையில், “நான் தலைமை நீதிபதியிடம் ஒரு வேண்டுகோள் வைக்கலாம் என்றிருந்தேன். அதற்குள் அவர் சென்றுவிட்டார். அதனால் இங்குள்ள பிற நீதிபதிகளிடம் கோரிக்கையை முன்வைக்கிறேன். தமிழ்நாட்டிற்கு 11 கோடி தடுப்பூசி தேவைப்படுகிறது. ஆனால், ஒன்றிய அரசு 1.46 கோடி தடுப்பூசிகளை மட்டுமே வழங்கி உள்ளது” என்றார்.

மேலும், “அதிகளவிலான தடுப்பூசிகளை வழங்க ஒன்றிய அரசை சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்த வேண்டும்.தமிழ்நாட்டுக்கு விரைந்து தடுப்பூசி கிடைக்க, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உதவி செய்ய வேண்டும்”  என வலியுறுத்தினார். 

source https://news7tamil.live/covid-vaccine-udhayanithi-stalin-urgue-to-chennai-high-court.html

ஞாயிறு, 27 ஜூன், 2021

தடுப்பூசிகளை வீணடிக்கும் தனியார் மருத்துவமனைகள்: கூடுதலாக ஒதுக்க மத்திய அரசு மறுப்பு

  இந்தியாவில் உருவெடுத்துள்ள கொரோனா 2ம் அலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் துவங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த தடுப்பூசி திட்டத்தின் கீழ் மே மற்றும் ஜூன் மாதங்களில் (ஜூன் 23 வரை) தமிழ்நாட்டின் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்ட 8 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் குளிர் சேமிப்பில் பயன்படுத்தப்படாமல் உள்ளன. மேலும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட 13.9 லட்சம் தடுப்பூசிகளில் பாதிக்கும் மேற்பட்டவை பயன்படுத்தப்படவில்லை. இது போன்ற நிலை இருப்பதால், மாநிலத்தில் 7.8% தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தி வரும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஜூலை மாதத்திற்கான தடுப்பூசியில் 25% தான் ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த (ஜூலை) மாதத்திற்கான தடுப்பூசியில் 71.5 லட்சம் டோஸ்கள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், 17.75 லட்சம் டோஸ் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 25% அளவை தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்குவது, எதிர்பார்க்கப்படும் மூன்றாவது அலைக்கு முன்னால் அதிகபட்ச எண்ணிக்கையிலான மக்களை “ஹைப்பர் தடுப்பூசி” செய்வதற்கான மாநிலத்தின் திட்டத்தைத் தடுக்கும் என்று பொது சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அரசாங்க தடுப்பூசி மையத்தில் தேவை இருக்கும்போது மத்திய அரசு ஏன் தடுப்பூசியை தனியார் துறைக்கு ஒதுக்க வேண்டும்” என்று தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரான பொது சுகாதார நிபுணர் டி.சுந்தரராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொது சுகாதார இயக்குநரகத்தின் தகவல்களின்படி, மே மாதத்தில் தனியார் கோவிட் தடுப்பூசி மையங்களுக்கு ஒதுக்கப்பட்ட 4.9 லட்சம் தடுப்பூசிகளில், மருத்துவமனைகள் 1.36 லட்சம் அளவை மட்டுமே வழங்கின. ஜூன் மாதத்தில், தனியார் மருத்துவமனைகள் 9 லட்சத்துக்கும் அதிகமான அளவை எடுத்து 4.8 லட்சம் அளவைப் பயன்படுத்தின. ஆக, மே 1 முதல் ஜூன் 23 வரை அவர்களுக்கு வழங்கப்பட்ட 13.91 லட்சம் அளவுகளில், 5.9 லட்சம் அளவுகள் மட்டுமே பயன்படுத்தியுள்ளன. “பயன்படுத்தப்பட்ட அளவுகளின் சராசரி எண்ணிக்கையின் அடிப்படையில் மாநிலத்திற்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கும் ஒதுக்கீடு செய்ய இதே விதி பின்பற்றப்பட வேண்டும், ”என்று சுந்தரராமன் குறிப்பிட்டுள்ளார்.

அரசு மையங்களில் பலர் தடுப்பூசிகளை விரும்புவதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் இலவசம், அதே சமயம் தனியார் மருத்துவமனையில் ஒரு நபர் தடுப்பூசி செலுத்தி கொள்ள தடுப்பூசியைப் பொறுத்து ரூ .850 முதல் 1,500 வரை செலுத்த வேண்டியுள்ளது. “மேலும், மக்கள் கோவின் போர்ட்டலில் எந்த நியமனம் அல்லது பதிவு இல்லாமல் அரசு மருத்துவமனைகள் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசி பெறலாம். முதன்முறையாக அரசு மருத்துவ சேவை மையங்களில் தடுப்பூசி செலுத்தியவர்கள் அரசின் இந்த நடவடிக்கை குறித்து ஆச்சரியப்பட்டனர். எனவே அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள தங்களாவே முன் வந்தனர்.”என்று முன்னாள் பொது சுகாதார இயக்குனர் மருத்துவர் கே. குழந்தை சாமி தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சலுகைகள் தங்களுக்கு இல்லை என்று தனியார் மருத்துவமனைகள் கூறிவரும் நிலையில், “எங்கள் வசதிக்கு வருபவர்களுக்கு மட்டுமே நாங்கள் தடுப்பூசி போட முடியும். ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோது, ​​பெரும்பாலான மக்கள் ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்வதை விட அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லவே விரும்பினர், ”என்று நகரத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் நோய்த்தடுப்புப் பிரிவில் உள்ள ஒரு மூத்த மருத்துவர் கூறியுள்ளார்.

ஆனால், தடுப்பூசி வழங்க அதிக தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிக்க முடியும் என்று மாநில நோய்த்தடுப்பு அதிகாரிகள் நம்புகின்றனர். “நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் அதிகமான தனியார் மருத்துவமனைகள் இருந்தால், நாங்கள் பாதுகாப்பு அதிகரிக்க முடியும். நாங்கள் அவர்களை ஊக்குவிக்க முயற்சிக்கிறோம், ”என்று நோய்த்தடுப்பு இணை இயக்குனர் மருத்துவர் கே வினய் குமார் கூறியுள்ளார்.

இருப்பினும், 25% ஒதுக்கீட்டில் இருந்து தனியார் மருத்துவமனைகளால் கோரப்படாத அல்லது பயன்படுத்தப்படாத தடுப்பூசிகளை ஜூலை மாதத்தில் அரசு பயன்படுத்த முடியுமா என்பது குறித்த தகவல் அரசிடம் இல்லை.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-in-tamil-50-of-covid-vaccine-doses-not-used-in-tn-private-hospitals-317424/

ஜெய் ஹிந்த் பேச்சு சரியா? ஈஸ்வரனுக்கு காங்கிரசும் எதிர்ப்பு

 

Kongu Eswaran Jaihind Issue : 26 06 2021 தமிழக சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்த கொங்கு ஈஸ்வரன்,ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம் பெறாதது, தமிழகம் தலைநிமிர்ந்துவிட்டதற்கான அடையாளம் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 21-ந் தேதி தொடங்கியது. 24-ந் தேதி வரை நடைபெற்ற இந்த கூட்டத்தில், முதல்நாளில் ஆளுநர் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் விவாதங்கள் நடைபெற்றதை தொடர்ந்து கடைசி நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான இ.ஆர். ஈஸ்வரன், தனது உரையில், ஆளுநர் உரையிலேயே அனைத்தையும் சொல்லிவிட முடியாது. இது வெறும் முன்னோட்டம்தான். தமிழக முதலமைச்சருடைய 50 ஆண்டு கால அனுபவத்தை அந்த ஆளுநர் உரையிலே நான் பார்க்கின்றேன். எந்தவிதமான புகழ்ச்சியும் இல்லாமல் ஆக்கபூர்வமான கருத்துக்களைத்தான் அரசு செய்யப்போகிறது என்பதை சொல்லியிருக்கின்றார்.

எல்லோருக்கும் எல்லாமும்.. என்ற வார்த்தை என்பது ஒரு சின்ன வார்த்தை அல்ல. இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வந்த வார்த்தைகளை போட்டிருக்கிறார்கள். “என்னுடைய அரசு என்னுடைய அரசு” என்று இந்த மன்றத்தில் உரையாற்றியதையெல்லாம் பார்த்து இருக்கின்றோம். ஆனால், இந்த அரசு மக்களுக்கான அரசு என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.  ஆக்கபூர்வமான கருத்துக்களைத்தான் இந்த அரசு விரும்புகிறது, எதிர்பார்க்கிறது. அது ஆளுநர் உரையில் கொல்லப்பட்டுள்ளது.

ஆளுநர் உரையை படித்தவுடனேயே தமிழகம் தலை நிமிர்ந்து விட்டது என்பதை புரிந்து கொண்டேன். ஒரு வரியில் சொல்லவேண்டும் என்று சொன்னால், சென்ற ஆட்சியில் ஆளுநர் உரையை நான் பார்த்தேன். கடைசியிலே, நன்றி, வணக்கம், ஜெய் ஹிந்த் என்று போட்டிருக்கிறது. ஆனால் இந்த ஆளுநர் உரையிலே அந்த ஜெய்ஹிந்த் இல்லை என்பதை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று முதலமைச்சர் டெல்லியில் சொன்னதை இந்த அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்தும் என்ற அந்த நம்பிக்கை இன்று வந்திருக்கிறது என்று பேசியுள்ளார்

இந்நிலையில், கடந்த ஆட்சியின் போது ஆளுநர் உரையில் இருந்த ஜெய்ஹிந்த் வார்த்த தற்போதைய ஆளுநர் உரையில் இல்லை என்று கூறியது குறித்து பலரும் கண்டளம் தெரிவித்து வருகின்றனர்.  இது  குறித்து நெட்டிசன்கள் பலரும், தமிழரால் சொல்லப்பட்ட ஜெயஹீந்த் வார்த்தை, சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியால் இந்திய அளவில் புகழ்பெறச் புகழ் பெற்றது. தற்போது இந்த வார்த்தை ராணுவத்தில் அதிகாரிகள் மத்தியில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, தேசப்பற்றை நினைவுபடுத்துகிறது தேசப்பைற்றை நினைவுபடுத்தும் இந்த வார்த்தை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த ஈஸ்வரனுக்கு எதிர்ப்புகள் வலுக்கின்றன.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-kongu-eswaran-speech-about-jaihind-issue-317522/

சனி, 26 ஜூன், 2021

புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிப்பு

 25 06 2021 மிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கிய நிலையில், ஊரடங்கு உத்தரவிலும் தள்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் இம்மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவு 3 முறை நீடிக்கப்பட்டு வரும் 28-ந் தேதி காலை 6 வரை அமல்படுத்தப்பட்டது.

இதில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து 50% பயணிகளுடன் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஊரடங்கு வரும் 28-ந் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்பது குறித்து கேள்வி எழுந்தது.

இதனையடுத்து ஊரடங்கு உத்தரவு நீடிப்பு  தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில் தமிழகத்தில் மேலும் சில தளவுகளுடன் ஊரடங்கு உத்தரவு வரும் ஜூலை 5 ந் தேதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ள, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர்,  திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில், டீக்கடைகள் காலை 6மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பார்சல் சேவைக்குமட்டுமே அனுமதி

தொடர்ந்து மன்சாதன கடைகள், புத்தக விற்பனை கடைகள், வாகனம் பழுது பார்க்கும் நியலையங்கள், செல்போன் சார்ந்த கடைகள், கம்யூட்டர் தொடர்பான கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. சாலையோர உணவுக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பார்சல் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பதிவாளர் அலுவலகங்கள் 100% பணியாளர்களுடனும், தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடனும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் என் அனைத்து அலுவலகங்களுக்கும் 50% பணியாளர்களுடனும் இயங்க அனுமதி. அனைத்து வகையான கட்டுமானப்பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டள்ளது.

அழகுநிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதி இல்லாமல் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி. உள்ளாச்சிதுறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் காலை 6 மணி முதல் காலை 9 மணிவரை நடைபயிற்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு பணிகள் 100 பணியாளர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. வட்டாச்சியரின் அனுமதி பெற்று வாரம் ஒருமுறை திரையறங்கை பராமரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளர்.

இதில் கொரோனா தொற்று மிதமாக உள்ள 23 மாவட்டங்களில் முன்பு அறிவிக்கப்பட்ட தளர்வுகள் அப்படியே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் தளர்வாக மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே 50% பயணிகளுடன் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் குளிர்சாதன பேருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் சாலையேர கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் இ-பாஸ் இல்லாமல் பயணிக்காலம் என்றும், அனைத்து கடற்கரைகளும் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படம்  என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-covid-lockdown-extend-one-week-curfew-with-new-regulations/

கொரோனா தீண்டாத தமிழகத்தின் பழங்குடியினர் கிராமம்

 25 06 2021 கடந்த ஆண்டின் துவக்க மாதங்களில் இந்தியா முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா தொற்று நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொடிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் நீட்சியாக தற்போது உருவெடுத்துள்ள கொரோனா 2ம் அலையும் நாட்டின் முக்கிய பகுதிகளில் பரவி வலி மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த பெருந்தொற்று அச்சத்திலிருந்து தமிழகத்தின் சில குக் கிராமங்கள் தங்களை தாங்களே தற்காத்து கொண்டுள்ளன. மேலும் 2 அலையிலும் கிராமத்தில் வசிக்கும் எந்தவொரு நபருக்கும் தொற்று பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் கோயம்பத்தூர் மாவட்டம் சின்னம்பதி கிராமம் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத கிராமமாக உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் பழங்குடியினர். 150 நபர்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் 45 வயதிற்குட்பட்டோர் பாதிக்கு மேல் உள்ளனர்.


கிராமத்தை வைரஸிலிருந்து வெற்றிகரமாகப் பாதுகாப்பதற்கான திறவுகோலாக அதிகபட்ச விழிப்புணர்பு அமைந்தது என்று சின்னம்பதி கிராமத்தில் வசிக்கும் செந்தில் குமார் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், “உடல் ரீதியான தூரத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும், ஒருவித மாஸ்க்கை பயன்படுத்துவதன் மூலமாகவும், மூக்கு மற்றும் வாயை பொதுவில் மறைப்பதற்கு அரசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன்பே கற்பிக்கப்பட்டது” என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரின் மனைவி மதுக்கரை பஞ்சாயத்தின் தலைவர் ஆவார்.

“மாநிலத்தில் வைரஸ் வேகமாகப் பரவி வருவதை நாங்கள் உணர்ந்தபோது, ​​கடுமையான நடவடிக்கைகளைச் செய்ய பஞ்சாயத்து முடிவு செய்தது. வேலைக்காக எங்கள் கிராமத்திற்கு வெளியேயும், உள்ளேயும் மக்கள் செல்வதை நாங்கள் கண்காணித்தோம். நம்மா நவகராய் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், நாங்கள் தன்னார்வலர்களை அமைத்து ஒவ்வொரு வீட்டிலும் உறுப்பினர்களின் பட்டியலைத் தயாரித்தோம்.

ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு மக்களை அழைத்துச் செல்ல எங்களுக்கு இரண்டு வாகனங்கள் வழங்கப்பட்டன. லேசான அறிகுறி கூட உள்ள எவருக்கும் உடனடியாக கவனம் செலுத்தப்பட்டது. நோயெதிர்ப்பு நோக்கங்களுக்காக குடும்பங்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்கினோம்.

வெளியாட்கள் வருவதைத் தடுக்க கிராமவாசிகள் தங்கள் விருப்பப்படி வேலி அமைத்திருந்தாலும், அதிகாரிகள் மருத்துவ முகாம்கள் மற்றும் வழக்கமான கோவிட் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் தங்கள் பங்கைச் செய்தனர்” என்று செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகளுக்கு உள்கட்டமைப்பு இல்லாததால், கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வரும் முதல் பட்டதாரியான சந்தியா ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழுக்கு அளித்த பேட்டியில், “கிராமத்திற்குள் ஒரு ரேஷன் கடை உள்ளது. இங்குள்ளவர்களில் பெரும்பாலோர் குறைந்த ஊதியம் பெறும் வேலைகளைச் செய்கிறார்கள்” என்றுள்ளார்.

கேரளாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்த பழங்குடி குக்கிராமத்தில் மின்சாரம், நீர் மற்றும் வழக்கமான போக்குவரத்து சேவை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-in-tamil-a-tribal-settlement-remains-untouched-by-covid-19-317186/