How the US will recover remains of 400 of its soldiers missing in India : இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் காணாமல் போன 400 அமெரிக்க ராணுவ வீரர்களின் உடலை தேடும் பணியில் அமெரிக்க பாதுகாப்புத்துறையுடன் இந்தியாவின் தேசிய தடயவியல் பல்கலைக்கழகம் (National Forensic Sciences University (NFSU)) இணைந்துள்ளது.
இந்த பார்ட்னர்ஷிப் குறித்து
மே 27ம் தேதி அன்று நடைபெற்ற மெய்நிகர் ஆலோசனை கூட்டத்தில், அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் போர் குற்றவாளிகள் மற்றும் காணாமல் போனவர்களுக்கான War/Missing in Action Accounting Agency (DPAA) ஏஜென்சி என்.எஃப்.எஸ்.யு மற்றும் நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகம் (யு.என்.எல்) உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவில் இரண்டாம் உலகப் போரின் இறுதி ஆண்டுகளில் காணாமல் போன 400 அமெரிக்க ராணுவ மற்றும் விமானப்படை வீரர்களை அடையாளம் காண, அவர்களின் உடல் பாகங்களை உறுதி செய்யும் பணிக்காக வர உள்ளனர்.
DPAA என்றால் என்ன?
டி.பி.ஏ.ஏ என்பது அமெரிக்காவின் பாதுகாப்புத்துறைக்கு கீழே செயல்பட்டு வரும் முகமையாகும். 2015ம் ஆண்டு பல்வேறு முகமைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர், கொரியப்பூர், பனிப்போர், வியட்நாம் போர் மற்றும் ஈராக்கில் நடைபெற்ற தாக்குதல்களின் போது காணாமல் போன ராணுவ வீரர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த முகமை காணாமல் போன ராணுவ வீரர்களின் உறவினர்களுடன் தொடர்பில் உள்ளது. தற்போது இந்த முகமை காணாமல் போன 81,800க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை தேடி வருகிறது.
இந்தியாவுடனான கூட்டமைப்பு
வடகிழக்கு மாநிலங்கள் உட்பட இந்தியாவில் 8 இடங்களில் இது போன்ற ஆய்வை மேற்கொள்ள உள்ளாது டி.பி.ஏ.ஏ முகமை. 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அருணாச்சல பிரதேசம், அசாம், நாகாலாந்து மற்றும் திரிபுராவில் அமெரிக்காவின் மீட்பு பணிகள் நடத்தப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டில், டிபிஏஏ மற்றும் இந்திய மானுடவியல் ஆய்வு குழு ஆகியவை அமெரிக்க ராணுவ வீரர்களின் எச்சங்கள் இருப்பதற்கான சில ஆதாரங்களைக் கண்டறிந்தன.
டிபிஏஏ படி, அமெரிக்க இராணுவத்தின் 6 பணியாளர்களின் எச்சங்கள் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதே நேரத்தில் இந்தியாவில் இறந்ததாக நம்பப்படும் 306 பேர் இதுவரை கணக்கிடப்படவில்லை. எவ்வாறாயினும், இந்தியாவில் இந்த எண்ணிக்கை 400 க்கு மேல் இருக்கலாம் என்று முகமை நம்புகிறது.
கடந்த கால மோதல்களில் இறந்தவர்கள் குறித்து எவ்வாறு ஆய்வு மேற்கொள்கிறது டி.பி.ஏ.ஏ?
காலநிலை, நிலப்பரப்பு மற்றும் நிலபரப்பு சவால்கள் ஆகியவற்றை பொறுத்து, ஹோஸ்ட் செய்யும் நாடுகளுடன் கூட்டணி அமைத்து, அதன் செயல்பாடுகளைச் செய்ய ஒரு கால அளவை உருவாக்குகிறது டி.பி.ஏ.ஏ. முதலில் ஆராய்ச்சி மற்றும் விசாரணைக் குழுவை, பதிவேடுகள் மற்றும் காப்பகங்களை ஆய்வு செய்ய அனுப்புகிறது. அவர்கள் காணாமல் போன நபர்கள் இறுதியாக எங்கே இருந்தார்கள் என்று ஆய்வு செய்கின்றனர். இந்த விசாரணைக் குழு குறிப்பிட்ட பகுதிகளில் , கடந்த கால மோதல்கள் தொடர்பாக இராணுவத்திடமிருந்தோ அல்லது உள்ளூர்வாசிகளிடமிருந்தோ வாய்வழி வரலாற்றை பெறுகின்றனர். ஆர்ஐடியின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், மானுடவியல் மற்றும் தடய அறிவியல் வல்லுநர்கள் குழு விமானம் சிதைந்த எச்சங்கள் அல்லது உள்ளூர் பகுதிகளின் கல்லறை பதிவுகளை ஆய்வு செய்யும். கூறிய தகவல்கள் உண்மையாக இருந்தால் அந்த பகுதிகள் அகழ்வாய்வு செய்யப்படும், மனித உடல் எச்சங்கள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஆய்வகங்களுக்கு அவை அனுப்பப்படும்.
டிபிஏஏவுடன் இணைந்து என்.எஃப்.எஸ். யூ எவ்வாறு பங்காற்ற போகிறது?
புதிதாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், டி.எஃப்.ஏ.ஏ குழு, இந்திய மானுடவியல் ஆய்வு மற்றும் உள்ளூர் அணிகளுடன் என்.எஃப்.எஸ்.யு மாணவர்கள் உட்பட தடயவியல் நிபுணர்கள் குழு வடகிழக்கு மாநிலங்களுக்கு வருகை தரும். 70 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மானுடவியல் வழக்கில் NFSU வேலை செய்வது இதுவே முதல் முறையாகும். சிதைந்த உடல்கள் அல்லது எலும்புக்கூடுகளை அடையாளம் காணும் பணி ஓடோன்டாலஜி மூலம் செய்யப்படுகிறது, அதாவது தடயவியல் பல் பரிசோதனை மற்றும் தடயவியல் மானுடவியல் மூலம் இது செய்யப்படுகிறது.
டிபிஏஏ காணாமல் போன நபர்கள் குறித்து அவர்களின் குடும்பங்களுக்கும் அமெரிக்க நாட்டிற்கும் முழுமையான கணக்கீட்டை வழங்குவதற்காக என்.எஃப்.எஸ்.யுவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. NFSU-இல் எங்கள் பங்கு DPAA-க்கு அறிவியல் மற்றும் தளவாட திறன்களுடன் உதவுவதாகும் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய என்.எஃப்.எஸ்.யூ திட்ட மேலாளர் டாக்டர் கார்கி ஜானி கூறினார்.
இந்த பணிக்கு என்.எஃப்.எஸ்.யூ ஏன் தேர்வு செய்யப்பட்டது?
காந்திநகரில் இயஙி வரும் என்.எஃப்.எஸ்.யூ இந்தியாவின் தலை சிறந்த தடயவியல் நிறுவனமாகும். அங்கு தடயவியல் மானுடவியல், தடய அறிவியல் மற்றும் எலும்புகள் குறித்த ஆராய்ச்சியலுடன் இணைக்கப்பட்டுள்ளது. 3 டி ஸ்கேனர்கள் மற்றும் அச்சுப்பொறிகள் போன்ற பிற உபகரணங்களுடன் தடயவியல் ஓடோன்டாலஜி ஆய்வகத்தையும் இந்த நிறுவனம் கொண்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/explained/how-the-us-will-recover-remains-of-400-of-its-soldiers-missing-in-india-311323/