1.06.2021 நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளிவந்த பொருளாதார வளர்ச்சி குறித்த அறிவிப்பு கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது -7.3 சதவிகிதமாக நடப்பாண்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதனை குறிப்பிட்டு வயநாடு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குறைந்தப்பட்ட வளர்ச்சி, அதிகப்பட்ச வேலைவாய்ப்பின்மை நிலவி வருவதாகவும் என ட்விட்டர் வாயிலாக விமர்சித்துள்ளார்.
இந்த பொருளாதார பாதிப்புகள் பெரிய அளவில் இருந்திருக்கும் என்றும், ஆனால் மத்திய அரசின் நடவடிக்கைகளால் இது குறைந்த அளவாக பதிவாகியுள்ளது என மத்திய அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. தற்போதைய சூழலில் பல மாநில அரசுகள் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த தீவிரமான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. இதனால் சிறுகுறு தொழிலை சார்ந்த தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இந்த பாதிப்பே மத்திய அரசு வெளியிட்ட நடப்பாண்டு பொருளாதார அறிக்கையில் எதிரொலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
source https://news7tamil.live/minimum-growth-maximum-unemployment-rahul-gandhi.html