virginity tests for women army cadets : இந்தோனேசியாவில் ராணுவத்தில் சேரும் பெண்களுக்கு பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட கன்னித்தன்மை பரிசோதனையை ரத்து செய்வதாக செவ்வாய்க் கிழமை அன்று ராணுவ அதிகாரி தெரிவித்துள்ள்ளார்.
இந்தோனேசிய ராணுவத்தில் சேரும் பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது என்பதை மனித உரிமைகள் கண்காணிப்பகம் 2014ம் ஆண்டு வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. அதன் விசாரணையின்படி, 1965 முதல் ராணுவத்தில் சேர விண்ணப்பித்திருந்த பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் இதற்கு தேசிய காவல்துறை கொள்கைகள், தீண்டாமைக்கு அப்பாற்பட்டதாகவும், மனிதாபிமானம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று கூறிய பிறகும் இந்த சோதனை பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
இதுபோன்ற சோதனைகள் பெண் இராணுவ ஆட்சேர்ப்புகளுக்கும் நீண்ட காலமாக கட்டாயமாக இருந்தன. பெண் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமல்ல, ராணுவ வீரர்களை திருமணம் செய்யும் பெண்களுக்கும் இந்த சோதனை தேவைப்பட்டது என்று அதே ஆண்டில், அரசியல், சட்டம் மற்றும் பாதுகாப்புக்கான இந்தோனேசியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சர் டெட்ஜோ எத்தி, செய்தியாளர்களிடம் கூறினார்.
காவல்துறையில் இந்த பழக்கம் 2015ம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தாலும், ராணுவத்தில் இது தொடர்ந்து நீடித்தது.
கன்னித்தன்மை சோதனை என்றால் என்ன?
கன்னித்தன்மை சோதனையை நீக்குதல் : ஒரு இடைநிலை அறிக்கையில் உலக சுகாதார அமைப்பு, ஹைமன் பரிசோதனை, இருவிரல் பரிசோதனை மற்றும் யோனி பரிசோதனை என்றும் அறியப்பட்டிருக்கும் இந்த பரிசோதனை, பெண்கள் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார்களா என்பதை அவர்களின் பிறப்புறப்பை ஆய்வு செய்வதாகும்.
மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஒரு அறிக்கையில், “கன்னித்தன்மை சோதனை” என்பது பாலின அடிப்படையிலான வன்முறையின் ஒரு வடிவமாக பரவலாக, மதிப்பற்ற சோதனையாக பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் இந்தோனேசிய இராணுவத் தளபதிகளுடனான ஒரு டெலிகான்ஃபரன்ஸில், இந்தோனேசிய இராணுவத் தளபதி ஜெனரல் ஆண்டிகா பெர்கசா, முதன்முறையாக, பயிற்சியின் முடிவில், பெண் வீரர்களுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனை ஆண்களுக்கு செய்யப்படும் பரிசோதனைக்கு இணையாக இருக்க வேண்டும் என்று , இந்த பரிசோதனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதை மறைமுகமாக கூறினார். மேலும் விண்ணப்பதாரர்களின் உடல் தகுதியை மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
ராணுவ ஜெனரல், திருமணம் செய்துகொள்ளும் இராணுவ அதிகாரிகளுக்கு நிர்வாக சோதனைகளை மட்டுமே மேற்கொள்ள அறிவுறுத்தினார். அவர்களை திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணின் கன்னித்தன்மையை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.
அறிவியல் பூர்வமாக இந்த சோதனைகள் செல்லுபடியாகுமா?
ஐக்கிய நாடுகள் அமைப்புகளின் குழு, 2018 இல் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், ஒரு பெண் அல்லது ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை மதிப்பிடுவதற்கான சோதனைகளை ரத்து செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. உலக சுகாதார அமைப்பின் கன்னித்தன்மை சோதனை குறித்த முறையான மதிப்பாய்வின்படி, இந்த சோதனைக்கு அறிவியல் தகுதி அல்லது மருத்துவக் குறிப்பு ஏதும் இல்லை. ஒருவரின் உடலுறவு தொடர்பான வரலாற்றை நிரூபிக்க எந்தவிதமான சோதனையும் இல்லை என்று ஆய்வு கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை உடனடி மற்றும் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், மேலும் இது ஒரு பெண்ணின் உடல் மற்றும் உளவியல் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது. இந்த அறிக்கை “கன்னித்தன்மை” என்ற வார்த்தையை மருத்துவ அல்லது அறிவியல் அடிப்படையிலான சமூக, கலாச்சார மற்றும் மத கட்டமைப்பாக விவரிக்கிறது.
2015 ஆம் ஆண்டில், இந்தோனேசியாவின் முன்னாள் சுகாதார அமைச்சர் நிலா மோலோக், இராணுவம் மற்றும் காவல்துறையில் பெண் பணியமர்த்துவதற்கான ஒரு தேவையாக கன்னித்தன்மை சோதனைகளுக்கு எதிராக பகிரங்கமாக வெளிப்படையாக பேசினார். அதன் தேவை, துல்லியம் மற்றும் தகுதிகள் குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறினார். இந்த பிரச்சினை ஐரோப்பிய ஆணையத்தின் கவனத்திற்கு வந்தது. இந்த பரிசோதனையை பாகுபாடு மற்றும் இழிவானது என்றும் விவரித்துள்ளது.
மனித உரிமைகள் அமைப்புகள் இதனை எவ்வாறு பார்க்கிறது?
இந்த பரிசோதனை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பலரும் இதற்கு பலரும் வரவேற்பை தெரிவித்தனர். ராணுவம் சரியான பணியை செய்து வருகிறது என்று இந்தோனேசிய ஆராய்ச்சியாளர் மற்றும் எச்.ஆர்.டபிள்யூவின் ஆசிரியர் ஆண்ட்ரீஸ் ஹர்சோனா எழுதினார். தற்போது இதனை பின்பற்றுவது மற்றும் இந்த நடைமுறையின் அறிவியலற்ற, உரிமை மீறல் தன்மையை அறிவதும் பிராந்திய மற்றும் பட்டாலியன் தளபதிகளின் பொறுப்பாகும். அதிகரித்த அழுத்தம் கடற்படை மற்றும் விமானப்படையின் உயர் தளபதிகள் மீது கவனம் செலுத்த வேண்டும் மற்றும் இராணுவத்தின் வழியைப் பின்பற்றி, இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
இந்தோனேசிய கடற்படை செய்தி தொடர்பாளார் ஜூலியஸ் வித்ஜோனோனோ, பெண் விண்ணப்பதாரர்களுக்கு கர்ப்ப சோதனை மட்டுமே நடத்தப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட வகையிலான கன்னித்தன்மை சோதனை ஏதும் நடத்தப்படவில்லை என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விமானப்படை செய்தித் தொடர்பாளர் இண்டான் கிலாங், ”நீர்க்கட்டிகள் அல்லது பிற சிக்கல்களைச் சோதிப்பதற்காக” ரீப்ரொடெக்ஷன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் கன்னித்தன்மை சோதனை ஏதும் நடத்தப்படவில்லை என்று கூறியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்ல செய்தி! இந்தோனேசிய இராணுவத் தளபதி ஜெனரல் அந்திகா பெர்காசா இராணுவத் தளபதிகளிடம், பெண் அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் உள்ள மருத்துவ பரிசோதனை ஆண் மருத்துவ பரிசோதனையைப் போலவே இருக்க வேண்டும், இது “கன்னித்தன்மை சோதனை” என்று அழைக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருவதாகக் கூறினார் என்று ட்வீட் செய்துள்ளார் பெண்கள் உரிமை ஆர்வலர் மற்றும் செயலாளர் கேட் வால்டன்.
ஐரோப்பிய ஊடக துணை இயக்குநர், HRW, ஜான் கூய், கன்னித்தன்மை சோதனை என்பது போலி அறிவியல் மற்றும் ஒரு மனித உரிமை மீறல் என்று ஆகஸ்ட் 12 அன்று ஒரு ட்வீட்டில் மீண்டும் வலியுறுத்தினார்.
20 நாடுகளில் நிலவி வரும் சோதனை
பெரும்பாலான நாடுகளில் மிகவும் தொன்மையான அதே நேரத்தில் முற்றிலும் அறிவியல் மூலம் நிரூபிக்கப்படாத கன்னித்தன்மை சோதனைகள் மேற்கொள்வதை நிறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான், எகிப்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பல்வேறு காரணங்களுக்காக பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை நடத்தப்படுகிறது என்று அறிவித்துள்ளது ஐ.நா.
source https://tamil.indianexpress.com/explained/how-indonesia-finally-scrapped-virginity-tests-for-women-army-cadets-331944/