Monsoon rain : செப்டம்பர் மாதம் பெய்த அளவுக்கு அதிகமான மழை இந்தியாவில் உள்ள முக்கிய நீர் தேக்கங்களில் நீரின் அளவு உகந்த நிலைக்கு மீண்டும் வருவதை உறுதி செய்தது. செப்டம்பர் மாதம் 30ம் தேதி அன்று இந்தியாவில் உள்ள முக்கிய நீர்நிலைகளில், வழக்கமாக இந்த காலங்களில் இருக்கும் நீர் அளவுகளைக் காட்டிலும், கூடுதலாக நீர் உள்ளது. ஆண்டில் மிகவும் குறைவாக மழைப்பொழிவு இருக்கும் காலமான குளிர் காலத்தில் குடிநீர் தேவை, பயிர் பாசனம் மற்றும் மின்சார உற்பத்திக்கு இந்த நீர் நிலைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர் மிகவும் முக்கியமானது.
80% கொள்ளளவை அடைந்துள்ளது
தற்செயலாக, இந்த பருவமழையின் போது பெய்யும் மழையின் பரந்த ஏற்ற இறக்கங்கள் நீர் தேக்க அளவுகளில் ஓரளவு தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக ஆகஸ்ட் மாதம் 25% மழைப்பொழிவில் பற்றாக்குறையை கண்அது. ஆனால் இந்த நீர் தேக்கங்கள் மொத்தமாக இதன் கொள்ளளவில் 90% நீரை செப்டம்பர் மாதம் முதல் வாரம் நீர் தேக்கங்கள் பெற்றது. ஏனென்றால், நீர்த்தேக்கங்களின் பெரும்பாலான நீர்ப்பிடிப்புப் பகுதிகள் நாட்டின் பிற பகுதிகள் வறண்டு போன போதும் போதுமான மழைப்பொழிவைப் பெற முடிந்தது.
மத்திய நீர் ஆணையம் (CWC) வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 130 முக்கிய நீர்த்தேக்கங்கள் தற்போது சுமார் 138 பில்லியன் கன மீட்டர் நீரைத் தேக்கி வைத்துள்ளன, இது அவற்றின் ஒருங்கிணைந்த கொள்ளளவில் 80% ஆகும். ஆண்டின் இந்த நேரத்தில், இந்த நீர்த்தேக்கங்கள் சுமார் 132 பில்லியன் கன மீட்டர் நீர் மட்டுமே எப்போதும் இருக்கும். செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி 130 நீர்த்தேக்கங்களில் கிடைக்கும் நேரடி சேமிப்பு கடந்த ஆண்டில் இருந்த நேரடி சேமிப்பில் 92% ஆகவும், கடந்த பத்து வருட சராசரி சேமிப்பின் 104% ஆகும் என்றும் மத்திய நீர் ஆணையம் அறிவித்துள்ளது.
பிராந்திய வேறுபாடுகள்
நீர் தேக்கங்களில் உள்ள நீரின் அளவு பிராந்தியத்திற்கு பிராந்தியம் மாறுபடுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் உள்ள நீர் நிலைகளில் இருக்கும் நீரின் அளவு சராசரிக்கும் குறைவாக உள்ளது. அதே நேரத்தில் வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் வழக்கதை விட அதிகமாக நீர் சேமிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மத்திய பகுதிகளில் அமைந்திருக்கும் உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், மட்திய பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் நீரின் அளவு வழக்கமாகவே உள்ளது. மிகப்பெரிய பற்றாக்குறை இந்த முறை பஞ்சாபில் காணப்பட்டது. 130 நீர் தேக்கங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே அணை தேய்ன் மட்டுமே. அதிலும் வழக்கத்தைக் காட்டிலும் குறைவாக நீர் தேக்கம் செய்யப்பட்டுள்ளது.
கங்கை, சுபர்ணரேகா, டாப்பி, கோதாவரி, கிருஷ்ணா, மகாநதி, காவேரி, கட்ச் பகுதிகளில் இருக்கும் ஆறுகளின் நீர் தேக்கங்களில் சேமிக்கப்பட்ட நீரின் அளவு வழக்கத்தை விட சிறப்பாக இருந்தது. ஆனால் சிந்து மற்றும் சபர்மதி நீர்பிடிப்பு பகுதிகளில் தேக்கி வைக்கப்பட்ட நீரின் அளவு குறைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மழைக்காலங்களில் ஏற்பட்ட மழைப்பொழிவு முறையில் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. நாடு முழுவதும் மொத்தமாக இந்த நான்கு மாத பருவ காலத்தில் 99% வழக்கமான மழைப்பொழிவு நிகழ்ந்துள்ளது. வடகிழக்கு மற்றும் வடமேற்கு முறையே 88% மற்றும் 96% மழைப்பொழிவை பெற்றுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தென்னிந்தியா 111% மழையையும் மத்திய இந்தியா 104% மழையையும் பெற்றுள்ளது.
பருவமழையின் துவக்கம் சீராக இருந்த போதும் ஆகஸ்ட் மாதத்தின் போது இந்த ஆண்டு இந்தியாவில் வறட்சி நிலவப் போகிறது என்ற சூழலே நிழவியது. கடந்த 100 ஆண்டுகளில் மிகவும் வறட்சியான ஆகஸ்ட் மாதம் இதுவே. செப்டம்பர் மாதம் இதற்கு முற்றிலும் எதிராக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் ஏற்படும் சராசரி மழைப்பொழிவைக் காட்டில் 35% கூடுதல் மழை பொழிந்தது. செப்டம்பர் மாதத்தில் அதிகப்படியான மழைப்பொழிவு தொடர்ந்து மூன்று வருடங்களாக பதிவாகியுள்ளது.
நகரும் பூமத்திய ரேகை காற்று அமைப்பான மேடன் ஜூலியன் ஆஸிலேசன் எதிர்மறை இந்தியப் பெருங்கடல் டிபோலை பலவீனப்படுத்தியது. இது பசிபிக் பெருங்கடலில் எல் நினோ அலைவுகளைப் போன்ற ஒரு நிகழ்வு ஆகும். மேலும் இரண்டாம் பாதியில் குலாப் போன்ற புயல் செப்டம்பர் மாதத்தில் அதிகப்படியான மழைப்பொழிவிற்கு காரணமாக அமைந்தது.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறானவை. வங்காள விரிகுடாவில் தொடர்ந்து ஏற்பட்ட குறைந்த அழுத்த தாழ்வு மண்டல நிகழ்வுகள் ஆகஸ்ட் மாதத்தில் நிலவிய அனைத்து பாதகமான சூழல்களும் செப்டம்பர் மாதத்தில் சாதகமாக மாறியது. இது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பருவமழையை நீடித்திருக்க வைத்தது. செப்டம்பர் மாதத்தில் மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவில் நல்ல மழைப்பொழிவு இருந்தது என்று ஐ.எம்.டி. இயக்குநர் மொஹபத்ரா கூறினார்.
ஜூன் மாதத்தில் இயல்பை விட 110% மழை பெய்தது, ஆனால் ஜூலை மாதத்தில் 93% மட்டுமே கிடைத்தது.
source https://tamil.indianexpress.com/explained/monsoon-rain-this-year-variable-rains-optimum-water-349985/