சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்டம் ஒரு ஆண்டு நிறைவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, போராட்டம் நடைபெறும் இடத்தில் வெள்ளிக்கிழமை காலை ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். ஒரு வீடியோவில் போராட்டக்காரர்களின் ஒரு பகுதியாக உள்ள நிஹாங் சீக்கிய குழுவினர் இந்த கொலைக்கு பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் பதிவாகியுள்ளன அந்த நபர் கீழே விழுந்து கிடந்த போலீஸ் தடுப்பு கம்பியில் கட்டப்பட்டுள்ளார். அவரது கை மணிக்கட்டு வெட்டப்பட்டும் அவரது கணுக்கால் மற்றும் கால் உடைக்கப்பட்டும் காணப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில், நிஹாங் சீக்கியர்கள் என்ற போர்வீரர் குழு, சீக்கியர்களின் புனித புத்தகத்தை அவமதித்ததாக சந்தேகித்து அந்த நபரை கொன்றதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் மாநிலம், டார்ன் தரன் மாவட்டத்தில் உள்ள சீமா காலன் கிராமத்தைச் சேர்ந்த 35 வயது லக்பீர் சிங் என்பவர்தான் கொல்லப்பட்டவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த கிராம தலைவர் அவன்குமார் மற்றும் உள்ளூர் டிஎஸ்பி சுச்சா சிங் ஆகியோர் கொல்லப்பட்டவரின் அடையாளத்தை உறுதி செய்தனர்.
போராட்டம் நடந்த இடத்திற்கு அருகே போலீஸ் தடுப்பு கம்பியில் ஒருவர் கட்டப்பட்டு இருப்பதாக காலை 5 மணியளவில் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து குண்டிலி காவல் நிலையத்திலிருந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது.
சோனேபட் காவல் கண்காணிப்பாளர் ஜஷன்தீப் சிங் ரந்தாவா கூறுகையில், “காயமடைந்த நபர் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அற்விக்கப்பட்டது. அடையாளம் தெரியாத நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளோம். கொலையான நபர் புனித புத்தகத்தை அவமதித்ததாக சில நிஹாங் சீக்கியர்கள் கூறிய வீடியோக்கள் பரவி வருகின்றன. அவர் சில நிஹாங் சீக்கியர்களால் அடித்து கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.
ஒரு வீடியோவில், காயமடைந்த நபர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் காணலாம். ஒரு கை கயிற்றால் கட்டப்பட்டு, அவரது இடது கை வெட்டப்பட்டு பல ஆண்கள் நின்று கேள்வி கேட்கிறார்கள்.
மற்றொரு வீடியோவில், அதிகாலை 3 மணியளவில், பாதிக்கப்பட்ட நபர் குருத்வாரா சாஹிப் அருகே போராட்ட நடைபெற்ற இடத்தில் ஒரு தன்னார்வலரால் காணப்பட்டதாகக் கூறுகிறார். அவர் கூறியதாவது: “அடையாளம் தெரியாத நபர் குரு கிரந்த் சாஹிப்க்கு செல்ல முயன்றான். ஒரு தொண்டர் அவரை பார்த்தார். நாங்கள் அவரைப் பிடித்து அவரை அனுப்பியவர் யார் என்று கேட்டோம். நாங்கள் அவரது காலை உடைத்து அவரது கையை வெட்டினோம். அவர் இப்போது இங்கே கட்டப்பட்டிருக்கிறார். அவரை அனுப்பியவர் இப்போது இங்கு வரலாம். நாங்கள் அவரை கொல்வோம். அவர் புனித நூலை மதிக்கவில்லை. போலீசார் தங்கள் விசாரணையை நடத்தலாம்.” என்று கூறினார்.
அந்த வீடியோவில் கொலையான நபர் அருகே கட்டப்பட்டிருப்பதைக் காணலாம்.
உள்ளூர் மற்றும் கிராம தலைவர் கருத்துப்படி சிங் தனது சகோதரியுடன் வசித்து வந்தார். அவரது பெற்றோர் இப்போது உயிருடன் இல்லை என்று தெரிவித்தார்.
அவர்கள் அவரை கடைசியாக செவ்வாய்க்கிழமை கிராமத்தில் பார்த்ததாகக் கூறினர். டிஎஸ்பி சுச்சா சிங், “கிராமத்திலிருந்து சிங்குவுக்குச் சென்ற ஒரே நபர் அவர்தான்” என்றார்.
கிராம தலைவர் அவன்குமார், அவரது தந்தை ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்றும், லாக்பீர் அடிக்கடி தொழிலாளியாக ஏதாவது வேலை செய்வார் என்றும் கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/singhu-border-farm-protest-site-man-killed-nihang-sikhs-355976/