3 2 2022 Draft EIA released in Tamil as well Centre tells court: மத்திய அரசின் சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற துறை 2020ம் ஆண்டு வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையை தமிழிலும் வெளியிட வேண்டும் என்று மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பி.டி. ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வரைவு அறிக்கை 8வது அட்டவணையில் இடம் பெற்றிருக்கும் 22 மொழிகளிலும் வெளியிடப்பட்டது. தமிழிலும் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது என்று கூறினார்.
மத்திய அரசு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தனர். 2020ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்படும் போது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வெளியிடப்பட்டது. பல மாநிலங்களை சேர்ந்த அரசியல்வாதிகள் பிராந்திய மொழிகளிலும் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தொடர் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/draft-eia-released-in-tamil-as-well-centre-tells-court-405847/