புதன், 7 செப்டம்பர், 2022

உஷார் மக்களே..! ஆண்டுக்கு ரூ6000 உதவி; ஆதார் கார்டு இணைச்சவங்களுக்கு மட்டும்தான்!

 

6 9 2022

PM Kisan: உஷார் மக்களே..! ஆண்டுக்கு ரூ6000 உதவி; ஆதார் கார்டு இணைச்சவங்களுக்கு மட்டும்தான்!
செப்.15ஆம் தேதிக்குள் 12ஆவது தவணையான ரூ.2 ஆயிரம் விடுவிக்கப்பட உள்ளது.

பிரதான் மந்திரி கிஷான் யோஜனா திட்டத்தின் பயனாளியா நீங்கள்? அப்படியென்றால் இந்தச் செய்தி உங்களுக்காகதான்.
பிரதான் மந்திரி கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 12ஆவது தவணையை விரைவில் விடுவிக்கிறது. இது செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடைபெற சாத்தியக் கூறுகள் உள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் வங்கிக் கணக்கில் ஆதார் எண் சமர்பித்து பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மட்டும்தான் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு ஆதார் எண் சமர்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் மட்டும் பணம் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. இது எதிர்க்கட்சிகளால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு தனது பணக்கார சொந்தங்கள் வாங்கிய கோடிக்கணக்கான கடனை தள்ளுபடி செய்கிறது.
ஆனால் பிஎம் கிஷான் யோஜனா திட்டத்தில் ரூ.2 ஆயிரம் பெற்ற விவசாயிகளிடம் உங்களுக்கு தகுதியில்லை என்று நோட்டீஸ் அனுப்பி கொடுத்த பணத்தை வசூலிக்கிறது.

இது முற்றிலும் தவறானது. மத்திய அரசு முடிந்தால் தங்களது பணக்கார முதலாளிகளிக்கு கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளட்டும் எனத் தெரிவித்துள்ளது.
பிரதமர் கிஷான் யோஜனா திட்டம் குறித்து அறிந்து கொள்ள கட்டணமில்லா 155261 / 011-24300606 இந்தத் தொலைப்பேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

source https://tamil.indianexpress.com/business/government-to-transfer-12th-installment-of-rs2000-in-aadhaar-seeded-accounts-of-farmers-only-506232/

Related Posts: