குஜராத் மாநிலம் போதைப் பொருட்களின் மையமாக மாறியுள்ளது என்றும், முந்த்ரா துறைமுகத்தில் இருந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கலந்து கொண்டார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றார்.
பாஜக அரசு ஆயிரக்கணக்கான பள்ளிகளை மூடியதை சுட்டிக்காட்டிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் 3,000 ஆங்கில வழிப் பள்ளிகளைத் திறந்து, பெண்களுக்கு இலவசக் கல்வியை வழங்குவோம் என்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு 5 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் கூறினார். ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு (கேஸ்) 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும், பொது நுகர்வோருக்கு 300 யூனிட் இலவச மின்சாரமும் வழங்குவோம் என கூறினார். குஜராத் போதைப் பொருட்களின் மையமாக மாறியுள்ளது என குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, இவை அனைத்தும் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து வருவதாக தெரிவித்தார். ஆனால் பாஜக அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சாடினார்.
– இரா.நம்பிராஜன்
source https://news7tamil.live/gujarat-has-become-a-drug-hub-rahul-gandhi.html