/indian-express-tamil/media/media_files/W2sL5SvI79VMRjGtkUPP.jpg)
திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, “ D-டெங்கு M- மலேரியா K- கொசு என திமுகவை விமர்சித்தார்.
தமிழக முதலமைச்சரின் மகனும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், “கடந்த வாரம் சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டார்.
அந்த மாநாட்டில் பேசிய அவர், “சில விஷயங்களை எதிர்க்க முடியாது, ஒழிக்கப்பட வேண்டும். டெங்கு, கொசு, மலேரியா, கரோனாவை எதிர்க்க முடியாது. இதை ஒழிக்க வேண்டும். சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” எனக் கூறினார்.
இதற்கு பாரதிய ஜனதா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட மற்றொரு அமைச்சர் (இந்து அறநிலையத்துறை) பதவி விலக வேண்டும் என மாநில பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையில் திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, “ D-டெங்கு M- மலேரியா K- கொசு என திமுகவை குற்றஞ்சாட்டினார்.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் கொசுவர்த்தி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது அவரின் சனாதன எதிர்ப்பு கருத்துகளை குறிக்கிறது.
இதற்கிடையில் பாரதிய ஜனதா கட்சியினர் அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உதயநிதிக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/udhayanidhi-stalin-shares-pic-of-mosquito-repellent





